Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குரூப் ஸ்டடி என்ற ஒரு விஷயத்தை…

குரூப் ஸ்டடி என்ற ஒரு விஷயத்தை, படிப்பதாக கூறி ஏமாற்றும் ஒரு வித்தை என்றே பலரும் நினைக்கின்றனர்.

இன்றைய நிலையில் பல பெற் றோர்கள் தங்களின் பிள்ளை கள் குரூப் ஸ்டடியில் ஈடுபடு வதை விரும்புவதில்லை. ஏ னெனில் நண்பர் களுடன் சேர்ந்து படிக்கிறேன் என்ற போர்வையில், அரட்டை அடி த்து நேரத்தை தங்களின் பிள்ளைகள் வீணாக்கு கின்றனர் என்ற கவலை அவர்களுக்கு. குரூப் ஸ்டடி என்ற வெற்றிகரமான பயிற் சியை சரியாக அமைத்துக்கொள்ளவில் லை எனில், பெற்றோர் களின் கவலை நிஜ மாகிவிடும். ஆனால் ஒரு குரூப் ஸ்டடி, அதன் உண்மை அம்சத்தோடு மிக சரியாக மேற் கொள்ளப் பட்டால், அதன்மூலம் கிடைக்கும் நன்மை கள் ஏராளம்.

குரூப் ஸ்டடி என்பது தேர்வு நேரத்தில் மட்டுமின்றி, எல்லா காலங் களிலும், ஏன், மாணவர் பருவம் முழுவதும் கடைபிடிக் கத்தக்க ஒரு வெற்றிகரமான அம்சம். ஒரு சிறந்த நன்மையைத் தரும் குரூப் ஸ்டடியை எவ்வாறு மேற்கொள்வது என்ற முக்கிய வழிமுறையை இந்த தேர்வு நேரத்தில் மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

* குரூப் ஸ்டடிக்கு ஆட்கள் அமைவது முதல் முக்கியம். ஒரே வகுப் பில் அல்லது ஒரே பள்ளியில் படிக்கும் அல்லது அருகருகே வசிக்கும் மாணவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். படிப்பில் அக்கறை யும், தேர் வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஆர்வ மும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 மாணவர்கள் வரை குரூப் ஸ்டடியில் பங்கேற்கலாம்.

* ஒரு நல்ல குரூப் ஸ்டடி என்பது மற்றொரு வகுப்பறை போன் றது. ஏனெனில் பல மாணவர்கள் சேரும்போது ஒரு பாடத்தில்  தங்களின் தனிப்பட்ட புரிந்துணர்வுகளை பரவலாக பகிர்ந்து கொள் கின்றனர். குரூப் ஸ்டடியில் ஒரு பாடத்தை படிக்க எடு த்துக் கொள்ளும்போது, எத்த னை மாணவர்கள் இருக்கிறார் களோ அத்தனை பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். அந்த பாடத்தை அனைவரும் முடிக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

முடிவில் பிரித்துக்கொண்ட ஒவ்வொரு பகுதியிலும் அவரவர் களுக்கு புரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனால் ஒரே பாடத்தில் பரவலான புரிதல் ஏற்படும். அந்த பாடத்தைப் பற்றிய பயம் போகும். ஒருவேளை அது சம் பந்தமான ஏதேனும் குழப்பங்கள் தோன்றினால், ஆசிரியரிடம் கேட்டு சரிசெய்துகொள்ள வேண்டும்.

* பகுதிகளைப் பிரித்துக்கொண்டு படிக்கும்போது, தங்களின் பகுதி யை நன்கு படித்து தெளிவாக விளக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொரு வருக்கும் ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் ஆழ மாகவும், கவன மாகவும் படிப்பார்கள். இதனால் ஒரு ஆரோக் கியமான படித்தல் போட்டி அங்கே உருவாகும். ஒருவருக்கு சரி யாக தெரியாத விஷயம் மற்றவருக்கு நன்றாக தெரிந்திருக்கும். இதன்மூலம் பாடத்தில் எழும் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

* குரூப் ஸ்டடிக்கு தேர்ந்தெடுக்கும் இடம் பற்றி யோசிக்க வேண் டியதும் முக்கியம். எந்த தொந்தரவும், இரைச்சலும் இல்லாத, கவனம் சிதறும் வகையிலான விஷயங்கள் இல்லாத இடமாக இருந்தால் மிகவும் நல்லது. ஒரு நல்ல அறையாகவோ, மொட் டை மாடியாகவோ மற்றும் ஒதுக்குப்புறமான மரத்தடியாகவோ இருக்கலாம்.

* குரூப் ஸ்டடியில் தேர்வுக்கான ஒரு மாதிரி கேள்வித்தாளை உருவாக்கி நண்பர்களுக்குள் எழுதிப் பார்க்கலாம். அவற்றை மாற்றி மாற்றி திருத்திக் கொள்ளலாம். தேர்வுக்கான நேரத் தையும் நிர்ண யித்து க்கொள்ள வேண்டும். இதனால் ஒரு பயிற்சி தேர்வை எழுதிய அனுபவம் உங்களுக்கு கிடைத்து, தேர்வு பயம் அகன்றுவிடும். விடைத் தாள்களை மாறி மாறி திருத்திக் கொள் வதால் உங்களின் தவறுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படும்.

* குரூப் ஸ்டடியில் ஈடுபடும் முன்பாக ஒரு குழு தலைவரை தேர்வு செய்து கொள்ளுதல் நல்லது. அவர் குழுவின் நடவடிக் கைகளை ஒருங்கிணைப்பார். ஒவ்வொரு மாணவரும் மாறி மாறி குழுத் தலைவராக இருக்கலாம். ஆனால் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு என்ப து மிகவும் முக்கியம்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: