வெளி விஷயங்களெல்லாம் நிலையற்று நசிப்பதை உணர்ந்தால் அதனால் விஷய விரக்தி உண்டாகும். ஆகவே (ஆன்ம) விசார ணையே மிக முக்கியமான முதற்படி. அவ்விசார ணையால் உலக இன்பங்கள், செல் வம், பெயர், புகழ் முதலிய வற்றில் துச்ச புத்தி உண்டாகும். இவ் விதம் விரக்தியுற்ற புத்திக்கு ‘நான் யார்’ என் னும் விசாரணை வழி தெளி வாய் விளங்கும்.
‘அஹம்’ விருத்தியின் உற்பத்தி ஸ்தானம் இதயமே. அதுவே அடை வதற்குரிய இடம். சாதகனது அமைப்பு விசாரத்திற்கு இடங் கொடாவிடில் பக்தி மார்க்கத்தை அனுசரிக்கலாம். ஈசனி டமோ, குருவினி டமோ அல்லது தர்மம், பரோபகாரம், அன்பு, அழகு என்னும் லட்சிங்களிலோ முழு மனமும் ஈடுபட்டால் பிற பற்றுதல்கள் குன்றி ஏகாக்கிரதை உண்டாகும்.
விசாரணை, பக்தி என்னும் இரு வழிகளிலும் மனம் செல்லா விட்டால் பிராணாயாமம் முதலான ராஜயோக மார்க்கத்தைப் பின் பற்றலாம். உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், உயிரைக் காக்கும் ஒரு விஷயத்திலேயே கருத்து முழுவதும் குவிந் திருக்குமல்லவா? அத்தகைய உயிர் நிலையாம் மூச்சை நிறுத்தினால், மனம் தனக்குப் பிரியமான வேறு வெளி விஷய ங்களை நாடி ஓடாது, மூச்சும் கட்டுக்குள் அடங்கி நிற்கும். அந்நிலை யில் மனமும் கட்டுப்பட்டு அமைதியாய் நிற்கும்.
மாறாக, மனம் காமக்ரோதாதிகளால் அதிர்ச்சியுறும் போது மூச் சின் நிதானமும் ஒழுங்கும் தவறித் தாறுமாறாக இரைக்கும். அதி சந்தோஷம், அதி துக்கம் இரண்டுமே துக்கரம். அவ்விரு நிலை களிலும் மூச்சு நிலைதவறி ஒழுங்கற்றுப்போம். விஷயசுகம் நிஜசுகம் அல்ல. யதார்த்த சாந்தியே சுக ஸ்வரூபம். தீட்டுவதால் கத்திமுறை கூரியதாவது போல், அப்பியாசத்தால் மனம் மேன் மேலும் சூட்சுமாகிறது. அத்தகையான கூர்மனம் அந்தர் முகத்திலும் பகிர்முகத்திலும் கூட முன்னைக் காட்டிலும் நன் றாக வேலை செய்யும்.
ஞானம், பக்தி, யோகம் எனும் மூன்று வழிகளிலும்கூட, எக் காரணத்தாலோ ஒருவரது மனம் ஈடுபட இயலாவிடின், கர்ம மார்க்க த்தை அவர் அனுசரிக்கலாம். அதன்மூலம் சத்துவ குணத் தெளிவுபெற்று, குறுகிய சுயநலம் நீங்கிய அமைதியை மேவ லாம். உள்ளம் விசாலமாகிய நிலையில் ஞான, பக்தி, யோக மார்க்கங்களைப் பின்பற்றலாம். அல்லது நன்று அனுஷ் டிக்கப் பெற்று கர்ம யோகம் ஒன்றினாலேயே கூட உள்ள மலர்ச்சி தானே உண்டாகலாம்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்