காதலர் தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடம்.
சென்னையிலும் காதலர் தின விழா, களை கட்டியது. இதையொட்டி காதலர்கள் சென்னை மெரீனா கடற் கரை மற்றும் பூங்காக்களில் குவிந் தனர்.
ஒருவருக்கொருவர் பரிசு வழங்கி அன்பை வெளிப்படுத்திக் கொண்ட னர். இதற்கிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பும் கிளம் பியது. காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் மனோகரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகுந்தன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் புளியந் தோப்பில் நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.
இதற்காக புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தோப்பு பகுதியில் இருந்து 2 நாய் களுக்கு பொட்டு வைத்து, மாலை அணிவித்து குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மெயின்ரோட்டுக்கு வந்ததும் 2 நாய்களுக்கும் திருமணம் செய்து வைத்தனர். இதை பொதுமக்கள் பலர் வேடிக்கை பார்த்தனர்.