சென்ற டிசம்பரில், டெல் நிறுவனத்தின் இணைய தளத்தில், டெல் வென்யூ மற்றும் வென்யூ புரோ என இரு மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் கொஞ்சம் வெளியாயின. இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் குறித்து, பல யூகங்களும் வெளியாகி இருந் தன. தற்போது இவை அதிகார பூர்வமாக, டெல் நிறுவன த்தால், இந்தியாவில் விற் பனைக்கு வந்து விட்டன. இவற்றின் அம்ச ங்களை இங்கு காண லாம்.
டெல் வென்யூ மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப் படுகிறது. டெல் நிறுவனம் தன் போன்களுக்கேற்ப உருவாக்கிய இன்டர்பேஸ் இயங்குகிறது. அத்துடன் இதில் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்கார்ப்பியன் ப்ராசசர் செயல்படுகிறது. இதன் டிஸ்பிளே திரை மீதாக, கொரில்லா கிளாஸ் தடுப்பு தரப்பட்டிருப்பதால், பல முறை கீழே விழுந்தாலும் சேதம் ஏற்படுவதில்லை.
இதன் திரை 4.1 அங்குல அகலமுள்ள AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் . WiFi 802.11 b/g, HSDPA, HSUPA, மற்றும் AGPS ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. A2DP மற்றும் EDR இணைந்த புளுடூத் செயல்படுகிறது. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் இணை ந்த 8 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. இதன் நினைவகம் 1ஜிபி. இதனை 32 ஜிபி வரை மெமரி கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட சிறப்பு அம்சங்களுடன், டெல் வென்யூ மொபைலில் அக்ஸிலரோ மீட்டர், டிஜிட்டல் காம்பஸ் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென் சார் தரப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் போனில் அடோப் பிளாஷ் 10.1 சப்போர்ட் செய்யப் பட்டுள்ளது. இத்துடன் பல சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கான இணைவமைப்பு தரப்பட்டுள்ளது. கூகுள் சர்ச், மேப்ஸ் மற்றும் ஜிமெயில் ஆகியவையும் சப்போர்ட் செய்யப்படுகி ன்றன. இதன் அதிக பட்ச விலை ரூ.29,900.
டெல் வென்யூ புரோ மொபைலில் மேலே வென்யூ போனில் தரப்பட் டுள்ள அம்சங்களுடன், சில கூடுதல் வசதிகளும் இணைக்கப் பட்டுள்ளன. இது விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில் இயங்குகிறது. குவெர்ட்டி கீ போர்டு உண்டு. போன் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இந்த போன் மட்டும் 8ஜிபி மற்றும் 16 ஜிபி என இரு வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.34,990 என குறிக்கப் பட்டுள்ளது.
மொபைல் போனில் கதிர்வீச்சு இருப்பது உண்மையே. அதன் வேக அளவு தான் போனுக்கு போன் மாறுபடும். கருவுற்ற தாய்மார்கள் அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்து வது வளரும் குழந்தையைப் பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே சற்றுத் தள்ளி வைத் து, இயர்போன் மூலம் பயன்படு த்தலாமே. கூடுமானவரை பயன்படு த்துவதனைத் தவிர்க்கலாமே.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்