பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத் துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளார். அபாய கட்டத்தில் இருக்கும் அவ ருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகி றார்கள். இதுவரை 4 ஆயி ரம் பாடல் களுக்கு மேல் பாடியிருக்கும் மலேசியா வாசுதேவன், மலேசிய நட்சத் திரங்கள் நடித்த ரத்தப்பேய் என்ற படத்தின் மூலம் நடிக ராக தமிழ் சினிமாவுக்கு அறிமு கமானார். அதன் பிறகுதான் இளைய ராஜாவின் இசைக்குழுவில் சேர்ந் து மேடைப்பாடகர் ஆனார். பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமன் குரலில்பாடி புகழ் பெற்றார். உறவாடும் நெஞ்சம் என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகர் ஆனார். 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற, ஆட்டுக் குட்டி முட்டையிட்டு… என்ற பாடல் மூலம் பட்டிதொட்டி யெங்கும் பிரபலம் ஆனார்.
பின்னணி பாடகராக புகழின் உச்சத்தில் இருந்தபோது மலேசியா வாசு தேவனுக்கு சமீப காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பக்கவாத நோயால் அவதிப்பட்ட அவரால் எழுந்து நடமாட முடியவில்லை. ஏற் கனவே அவருக்கு சர்க்கரை நோயும் இருந் ததால், அவருடைய காலில் ரத்தம் உறைந்தது. படுத்த படுக்கையாக இருந்த அவர் உடல்நிலை நேற்று மேலும் மோச மடைந்தது. இதைத்தொடர்ந்து அவரை சென் னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அவருடைய உடல்நிலை கவலைக் கிடமாக இருப் பதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )