Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய நோக்கியா சி5-03

அதிகார பூர்வமாக அறிமுகப் படுத்தவில்லை என்றாலும், சில வாரங்களாக நோக் கியாவின் சி5-03 மொபைல் கடை களில் கிடைக் கிறது. அதிக பட்ச விலை யாக ரூ.9250 எனக் குறிக்கப் பட்டுள்ள இந்த போன், பல சிறப்ப ம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப் பட் டுள்ளது.

முதல் அம்சமாக இதன் கவர்ச்சியான, ஸ்லிம்மான தோ ற்றத் தினைக் குறிப் பி  டலாம். இதன் பரிமாணம் 105.8 x 51 x 13.8 மிமீ. எடை மிகவும் குறைவாக 93 கிராம் என்ற அளவில் உள்ளது. இது ஒரு 3ஜி மற்றும் வை-பி நுட்பம் கொண்டுள்ள போனாகும். திரை 3.2 அங்குல அகலத்தில் டி.எப்.டி. டச் ஸ்கிரீன் வகை. ப்ராசசரின் வேகம் 600 மெகா ஹெர்ட்ஸ். சிம்பியன் எஸ்.60 பதிப்பு 5 இதில் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்குகிறது. இந்த சிரீஸ் வகையில் வந்த நோக்கியா போன்களில் இது வேகமாக இயங்கும் போனாக உள்ளது.

ஓவி மேப்ஸ் பதிந்தே தரப்படுகிறது. 2ஜிபி மெமரி கார்ட் இணைக் கப் பட்டுள்ளது. அக்ஸிலரோ மீட்டர் சென்சார், ஹேண்ட் ரைட் டிங் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 40 எம்பி ஸ்டோரேஜ் நினைவகம், 128 எம்பி ராம் மெமரி, 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. ஸ்லாட், A2DP இணைந்த புளுடூத், 5 எம்பி திறன் கொண்ட கேமரா, ஜியோ டேக்கிங் வசதி, விநாடிக்கு 15 பிரேம் அளவில் வீடியோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம். எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஜிங், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர், போட்டோ எடிட்டர், ஆர்க னைசர், பிளாஷ் லைட் 3.0, 1000 ட்அட திறன் கொண்ட பேட்டரி, 600 மணி நேரம் வரை மின் சக்தியைக் கொள்ளும் வசதி, தொடர் ந்து 35 மணி நேரம் பாட்டு இசைக்கும் திறன் ஆகியவற்றை இதன் சிறப்பு அம்சங்களாகக் குறிப்பிடலாம்.

கிளிப் போர்டு வியூவர்
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிரா பிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா? அப் போது இருமுறை சிஅழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவ டையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்லது என்று தெரியவரும்.

ஸ்டார்ட் மெனுவில் ஷார்ட்கட்
ஏதேனும் புரோகிராம் அல்லது பைலுக்கான ஷார்ட் கட் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் இடம் பெறுமாறு செய்திடலாம். இதற்கு டெஸ்க் டாப்பில் உள்ள அந்த ஷார்ட் கட் ஐகானை மவுஸால் இழுத்து வந்து ஸ்டார்ட் பட்டனில் விட்டுவிடவும். இனி ஷார்ட் பட்டனில் கிளிக் செய்து பார்த்து அந்த ஷார்ட் கட் மெனுவில் உள்ளதை உறுதி செய்திடவும்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: