Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புலியை மரக்கரண்டியால், விரட்டிய மலேசிய வீரப் பெண்

மலேசியாவை சேர்ந்த ஒரு பழங்குடியினப் பெண், தனது கண வன் மேல் பாய்ந்த புலியை, பெரிய மரக் கரண்டியைக் கொ ண்டு, தலையி லேயே “நச்’சென அடித்து விரட் டியுள்ளார்.

மலேசிய நாட்டின் வட பகுதியில் அடர் ந்த காடுகள் அதிகம். இங்கு, பாரம்பரிய வேட்டைத் தொழி லில் ஈடுபட்டுள்ள ஜகாய் பழங்குடி யினரும் ஒருபகுதியில் வசித்து வருகின்றனர். பழங் குடியினர் குடியி ருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசை க்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவர்மீது புலி ஒன்று பாய்ந்து, அவரை தாக்கி யுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத டாம் புன் அலறியபடி, அருகில் இருந்த மரத்தில் ஏறி தப்ப முயன் றுள்ளார். அப்போதும் விடாத புலி, அவரை இழுத்து கீழே தள்ளி யுள்ளது. புலியின் வாயை இறுகப் பிடித்துக் கொண்டபடி, டாம் புன் அபயக்குரல் எழுப்பியுள்ளார். இதைக்கேட்ட அவரது மனைவி, பெரிய மரக்கரண்டியை எடுத்து வந்து, புலியின் தலை யிலேயே ஒரு “போடு’ போட்டுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த புலி, தலை சுற்றியபடி அருகில் இருந்த புதருக்குள் பாய்ந்து தப்பி யோடி விட்டது.

இதையடுத்து, தலையிலும், கால்களிலும் காயங்களுடன் நகர்ப் பகுதி மருத்துவமனை ஒன்றில் டாம்புன் அனுமதிக்கப்பட்டார். அவர் கூறும் போது,’ எனது மனைவி மட்டும் உரிய நேரத்தில் வர வில்லை என்றால், நான் இறந்திருப்பேன்,’ என்றார். இதுபற்றி கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து, ஆள் நடமாட்டம் இல் லாத அடர்ந்த காட்டுக்குள் புலியை விரட்டியடிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர். புலியை முறத்தால் நையப்புடைத்த புறநானூறு காலத்து வீரப் பெண்மணி பற்றி கேள்விப்பட்டுள்ள நாம், இப்போது தான் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக அறிகிறோம்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply