Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

யூனிநார் வழங்கும் கட்டற்ற இசை

மொபைல் போன் சேவைப் பிரிவில் ஏதேனும் புதுமைகளை அவ்வப்போது மேற் கொண்டு வரும் யூனிநார் நிறுவனம், அண் மையில் அளவில்லா இசை சேவை யினைத் தன் வாடிக்கை யாளர் களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த தொகுப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் பாடல்கள், காலர் ட்யூன், ரிங் டோன் ஆகிய வை உள்ளன. இதில் ஒரு மியூசிக் ரேடியோ சேவையும் உண்டு. கட்டணம் இல்லாத 52222 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இதனைப் பெறலாம். பாடல்களையும் மற்றவற்றையும் பெற, நாளொன்றுக்கு ரூ.2.50, வாரத்திற்கு ரூ.15, அல்லது மாதத்திற்கு ரூ. 60 செலுத்த வேண்டும்.

இதில் நீங்கள் விரும்பும் பாடலைத் தேர்ந்தெடுத்து, பின் * அழுத்தி அதனை உங்கள் ரிங்டோனாக செட் செய்து கொள்ள லாம். பாடலை டவுண்லோட் செய்திட “#” அழுத்த வேண்டும்.

இதனை கிராமப்புற மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனெ ன்றால், பாடல்களைப் பெற வேறு வசதிகள் அவர்களுக்குக் குறை வாகவே கிடைக்கும்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: