Tuesday, March 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

18ம் தேதி கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ஜெ., …

நாள், நட்சத்திரம், தேதி, கிழமை என அனைத்து அம்சங்களும் கூடி வருவதால், வரும் 18ம் தேதி கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ஜெ., வெளியிடுவார் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டசபை க்கு தேர்தல் தேதி எப்போது வேண்டுமானா லும் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. தேர்தலுக்கு தயாராகும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சி யான தி.மு.க.,வும், எதிர்க் கட்சியான அ.தி.மு.க.,வும் தங்கள் கூட்டணி யை இறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி யுள்ளன.

முக்கிய அரசியல் கட்சிகளான தே.மு.தி.க., – பா.ம.க., ஆகியவை தங்கள் கூட்டணியை முடிவு செய்யாமல் இருந்து வருவதால், அ.தி. மு.க., – தி.மு.க., கூட்டணி இறுதியாகாமல் உள்ளது. இதில், மத்திய, மாநில ஆட்சிகளை கருத்தில் கொண்டு பா.ம.க., – தி.மு.க., கூட்டணி யிலும், தி.மு.க.,வை ஆட்சியை விட்டே அக ற்ற வேண்டும் என்ற தீவிரத்தால், தே.மு.தி.க., – அ.தி.மு.க., கூட்டணியிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாசி மகம், நிறைந்த பவுர்ணமி நாளான 18ம் தேதியன்று, நட்சத்திரப் படி ஜெயலலிதாவின் பிறந்த நாள். இப்படி நாள், நட்சத்திரம், கிழமை, தேதி என அனைத்தும் சிறப்பாக அமைந்து ள்ளதால் அன்றைய தினத்தன்று சட்டசபைத் தேர்தல் குறித்த தனது முக்கிய முடிவை அவர் அறிவிப்பார் என்று அ.தி.மு.க., வட்டார த்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

பெருங்கூட்டம் குவியும்: சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், கடந்த 5ம் தேதி முதல், கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். பெரும் பாலான நிர்வாகிகள், தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்பதற்காக, அவர் பெயரில் டிபாசிட் செலுத்தியுள்ளனர்.

விருப்ப மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 18 கடைசி நாளாகும். மக நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி நாளான 18ம் தேதியன்று, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் தங்களுக்காக விருப்ப மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். டிபாசிட் செலுத்த, பவுர்ணமியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே, இந்த நாளில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பெரும் கூட்டம் அலை மோதும் என எதிர் பார்க்கப்படுகிறது.

(( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))

Leave a Reply

%d bloggers like this: