Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெற்றியின் ஃபார்முலா

ஒவ்வொருவரும் இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். உங்கள் இலக்கை அடைய தேவையான அனைத்து தகுதிக ளையும் நீங்கள் வளர்த்து கொள்வது அவசி யம். இலக்கை அடை ய விடா முயற்சியுடன் தொடர்ந்து செயல்படவேண்டும். உங்களு க்கான பாதையை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு மலையின் உச்சியை அடைய ஏராளமான வழிகள் இருக்கும். அதில் ஒரு பாதையை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்த பாதையில் வரும் பிரச்னைகளை கடந்து மலையின் உச்சியை அடைய வேண்டும். இதேபோன்று உங்களது வாழ்க்கையில் வெற்றி இலக்கை அடையும் வழியை சரியாக தேர்ந்தெடுத்து அதில் பயணிக்க வேண்டும். எத்தனை சோத னைகள் வந்தாலும் அதிலிருந்து பின் வாங்காமல் வெற்றி இலக்கை அடைய முற்பட வேண்டும்.

* படிக்கும் காலத்திலேயே பொறுப்புணர்வுடன் செயல்பட வே ண்டும். கல்லூரியில் படிக்கும்போது பகுதி நேரமாக வேலை பார்க்கலாம். இது உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

* வாய்ப்புகளை தேடி கண்டறிவது நமது கடமை. அதேபோன்று நம்மை தேடி வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னே றுவதிலேயே நமது சாமர்த்தியம் அடங்கி உள்ளது.

* உங்களுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியம். நீங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்ளும் துணிச் சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் தவறுகள் நடக் காத வாறு கவனமாக இருக்க வேண்டும்.

* உங்களுடைய நன்னடத்தையும் நீங்கள் வெற்றிபெறு வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண் டும்.

* உங்கள் வெற்றிக்கு உதவக் கூடிய நம்பகமான நபர்களை கொண்ட நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அவர் களின் ஆலோசனைகளை அவ்வப்போது கேட்டுப்பெற வேண் டும்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: