கண்ணைக் கவரும் கலர்கலரான பெர்ரீஸ் பழவகைகளான ஸ்ட்ரா பெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் மற்றும் ரஸ்ப்பெரீஸ் ஆகியவை இயற்கையிலேயே இனிப்புச்சுவை கொண்டவை. அதோடு பார்வைக்கு அழகோடு தேகத்துக்கு சத்தும் தரும் இப்பழ ங்கள் ஒவ்வொன் றிலும் அடங்கியுள்ள ஊட்டச்சத்து வகைகளை ஊட்டச்சத்து நிபுணர் கள் டாக்டர் பிரீத்தி விஜய் மற்றும் டாக்டர் ரீதிகா சமாட்டார் இரு வரும் பட்டியலி டுகிறார்கள்.
ஸ்ட்ராபெரீஸின் நன்மைகள்:
ஒரு கப் ஆரஞ்சுப்பழ ஜூஸ் தரக்கூடிய 100 மில்லிகிராம் வைட்ட மின் சி ஊட்டச்சத்து ஸ்ட்ராபெரீஸ் பழம் ஒவ்வொன்றிலும் அடங் கியுள்ளது.
வைட்டமின் சி சத்து மட்டுமன்றி கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்தும் நிறைந்தவை. இம்னிட்டி எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கவை.
நமது உடலில் உள்ள கை.கால் தசைநார்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ள காலஜென், எலஸ்ட்டின் போன்ற நார்ச்சத்து புரோட்டீன்கள் மற்றும் ரெட்டிகுலின் எனப்படும் எலும்பு மஜ்ஜை சிவப்பணுச் சக்தியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்தாகத் திகழ்கி றது.
சாப்பாட்டிற்குப்பின் உண்ணும் பழவகைகளுள் இது முக்கிய மானது. துண்டு துண்டாக நறுக்கிய ஸ்ட்ராபெரீஸ் பழங்களை ஒரு கப் செரிலா க்குடன் கலந்து எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிடலாம். இதன் மூலம் நமது உடலுக்கு 53 கலோரி வெப்பச் சக்தி கிடைக்கிறது!
புளூபெரிஸ்:
இதில் உள்ள வைட்டமின் சி சத்து மற்றும் தாது உப்புக்கள் புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது.
பித்தப்பை கோளாறுகள் வராமல் காக்கிறது.
மூளைக்குச் செல்லும் ரத்த நரம்புத் தந்துகிகளில் `ஸ்ட்ரோக்’ எனப் படும் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
கண்களில் மஞ்சள் நிற கேட்ராக்ட் நோய் ஏற்படாமல் பாதுகாக் கிறது.
பழங்களை மசியல் செய்து ஒரு கப் ஐஸ்கிரீமுடன் இணைத்துச் சுவைக்க, நமது உடலுக்கு 83 கலோரி வெப்பச்சத்தி கிடைக்கி றது!
நாம் உண்ணும் உணவு நன்கு ஜீரணமாகி குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப் பட்டு உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்துடன் கலக்க உதவுகிறது.
ஈரல் பாதுகாப்பிற்கும் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய் வராமல் பாது காப்பதற்கும் துணை புரிகிறது.
நுரையீரல்களை வலுவாக்கி வளமுறச் செய்கிறது.
மலட்டுத்தன்மை நீக்கி விந்து விருத்திக்குத் துணைபுரிகிறது.
உண்ணும் உணவின் புரோட்டீன் சத்தை நமது வயிற்றில் சுரக்கும் பெப்ஸின் என்னும் கஸ்ட்ரிக்ஜுஸ் பெப்டோனாக மாற்றுகிறது. பெப் டோனை சிறுகுடலில் சுரக்கும் ஜுஸ் அமி னோ அசிடாக மாற்றி, அமினோ அசிட் புரோட்டீனாக ரத்தத் துடன் கலக்கச் செய்கிறது. இந்த புரோட்டீன் சிந்தஸிஸ் செயல் முறைக்கு இதன் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.
ரத்தத்தில் குளுக்கோஸ் சத்துக் குறைவு ஏற்படாதவண்ணம் பாதுகாக் கிறது.
கூல்பெரீஸ்:
கூஸ்பெரீஸ் பழத்துண்டுகளை வெங் காயத் துண்டுகளுடன் வேக வைத்து சர்க்கரை சேர்த்து கூழாக்கி 100 கிராம் மீன் மற்றும் மாமிசக் கறி உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி வெப்பச் சக்தி கிடைக்கும்.
கண்பார்வை நன்றாகத் தெரிவதற்குப் பயன்படுகிறது. உடம்பில் உள்ள செல் அணுக்கள் மற்றும் ரடிக்கல் ஆகிய வற்றைச் சம நிலைப்படுத்தி வலுப் படுத்துகிறது.
உடலில் உள்ள செல் மெம்ரேனை சிதையாமல் பாதுகாக்கிறது.
புற்றுநோய் வராமலும், ஏற்கனவே புற்றுநோயில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு புற்றுநோய் செல்கள் மேலும் பெருகிப் பரவாமலும் தடுக்கிறது.
உடம்பில் `டிமர்’ என்கிற புற்றுநோய்க்கட்டி ஏற்படாமல் பாதுகாக் கிறது.
இருதயம் சம்பந்தமான கார்டியோவஸ்குலார் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
என்றும் இளமையுடன் இருக்கச்செய்யும். பிணி மூப்பு வராமல் பாது காக்கும். உடல்வலி மற்றும் பிணி நிவாரணியான ஆஸ் ப்ரின் கலந்த சலிசைலிக் அசிட் குணம் மிகுந்தவை.
பழத்திலுள்ள சாலிசைலிக் அசிட் நமது இருதயத்திலிருந்து ரத்தத் தினை உடம்பின் பிற பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் ரத்தத் தமனி கள் தடித்து விடாமல் பாதுகாக்கும் குணம் கொண் டது!
( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )