2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக
நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளதால், தமிழ் நாட்டில் தி.மு.க .வுடன் கூட்டணி வை த்து தேர்தலை சந்திப் பதில் சிக்கல்கள் இருப்ப தாகவும், இதனால் காங் கிரஸ் தலை மையில் ஒரு புதிய விïகம் அமை த்து ஏன் தேர்தலை சந்திக்க கூடாது? என்று காங்கிரஸ் விரும்புவதாகவும், டெல்லியில் தகவல் கள் பரவின.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.வுடன் இணைந்து தேர் தலை சந்திப்பது என்று காங்கிரஸ் ஏற்கனவே முடிவு செய்து விட்டது. இதுபற்றி இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலை யில் வேறு எந்த கட்சியுடனும் காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்த வில்லை.
வேறு கட்சியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக வரும் தகவல்கள் அடிப்படையே இல்லாதவை. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த வேண்டிய பொறு ப்பு எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் தயாராக இருக்கிறது.
இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட அரசை செயல்பட அனுமதிக்க வே ண்டும். இவ்வாறு மனிஷ் திவாரி கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )