Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உறங்கப் போகும்முன் – அன்னை

பத்திரமான இந்த முறையை நீ பின்பற்றலாம். அதாவது உறங்கப் போகும்முன் ஒருமுனைப்படு, தூல ஜீவனி லுள்ள இறுக்கத்தைத் தளர்த்து – உடலைப் பொறு த்த மட்டில்… அது படுக்கையின் மேல் ஒரு துணி  யைப் போல் கிடக்கும்படி செய்ய முயல், அதிலுள்ள திருக்கு முறுக்குக ளெல் லாம் போய் விடட்டும். ஏதோ ஒரு துண்டுத்துணி மாதிரி ஆகி விடும்படி அதைத் தளர்த்து.

பிறகு பிராணனை எடுத்துக்கொள்-அதைத் தணிவி, அதை எவ்வ ளவு முடியுமோ அவ்வளவிற்கு அமைதிப்படுத்து. பிறகு மனத் தை- அதைச் செயலற்றதாக வைத்திருக்க முயல். மூளை யின் மீது ஒரு பெரிய சாந்தியின், பெரிய அமைதியின் சக்தியை, முடி ந்தால் மோனத்தின் சக்தியைப் பிரயோகி. எந்தக் கருத் தோட் டத்தையும் பின்பற்றாதே, மூளையைக் கொண்டு எந்த முயற் சியும் செய்யாதே, ஒன்றும் செய் யாதே. மூளையிலும் எல்லா இயக்கங்களையும் தளர்த்து, ஆனால் முடிந்த அளவு பெரிய மோனத்திலும் அமைதியிலும் தளர்த்து.

இவற்றையெல்லாம் செய்துவிட்டபின், அவற்றோடு உன்னு டைய சுபாவத்திற்கு ஏற்றபடி ஒரு பிரார்த்தனையை அல்லது ஆர் வத்தைச் சேர்த்துக்கொள். உன்னிடம் உணர்வும் சாந்தியும் இருக்க வேண்டு மென்று, உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் முழுவதிலும் விரோத சக்தி களிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்க வேண்டும் என்று, அமைதியாக ஒருமுகப்பட்டிருக்க வேண்டும்.

பாதுகாப்புக் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள். உன்னுடைய உறக்கத்தைக் கண்காணிக்கும்படி இறைவனது அருளை வேண்டிக் கொள், அதன்பின் உறங்கப் போ. இதுதான் மிகச் சிறந்த நிலையில் உறங்குதல். அதன்பின் என்ன நடக்கும் என்பது உன்னுடைய அகத் தூண்டுதல்களைப் பொறுத்தது. ஆனால், விடாப்பிடியாக ஒவ்வொரு இரவும், மீண்டும் மீண்டும் இதைச் செய்து வந்தால், சில நாட்களுக்கு பின் அதனால் பலனுண்டாகும்.

(( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: