Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகின் பழமையான சமையல் புத்தகம்..!

பாபிலோனிய நீர் சமையல் ஓர் கண்டுபிடிப்பு..!

உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஒன்றை நம் ஆராய்ச்சியாளர்கள் கண் டு பித்துள்ளனர். ஆனால் அது இன்றுள்ள புத்தகம் போல காகிதத் தாளில் இல்லை. ஆதிகால களிமண் பலகை களால் ஆனது. 2004ல் யேல் பல்கலைகழக ஆராய்ச்சியா ளர்கள், கியூனிபார்ம் எழுத் துக்கள் உள்ள மூன்று களி மண் பலகை களை கண்டு பிடித்துள்ளனர். ஒவ்வொன்றிலும் சமையல் குறிப் புகள் உள்ள தகவல்களே காணப்படுகிறன. மூன்றிலும் மொத்த மாக 35 வகையான சமையல் குறிப்புகள் உள்ளன. இவை பழைய பாபிலோனிய காலத்தின் இடைப்பகுதியில் தொகுக்கப் பட்டதா கும். இதுதான் உலகிலேயே மிகப் பழமையான சமையல் கலை புத்தகம். இதன் வயது சுமார் 3 ,700 ஆண்டுகள்.

புரியாத மொழியும்.. தெரிந்த தகவலும்..!

புதிய கண்டுபிடிப்பு நீர் சமையலும் சுவையும்.. !

அதில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள் ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கறி, கோழி, காய்கள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. உங்களுக்கெல்லாம் ஒரு அற்புதமான, ஆச்சரியமான, சுவையான விஷயம் சொல்லலமா? அதுதான் நீரில் சமைப்பது. இது என்னப்பா அதிசயம். நாம் சாதாரணமாய் செய்வது தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. நீரில் சமைப்பது என்பது, சமையல் அறிவியலில் புதுமை கலந்த ஓர் முக்கியமான மைல் கல். அதுவரை மக்கள், நேரடியாய் நெருப்பில் போட்டு சமைத்த னர்; பின், சுட்டனர்; பிறகு பாத்திரத்தில் போட்டு வதக்கினர்; வறுத் தனர். நெருப்பு தணல்/ தீயில் வாட்டினர்; லேசாக புரட்டி புரட்டி வாட்டினர். இதெல்லாம் போக நீரில் போட்டு சமைப்பது, சுவையான  வசதியான சமையலாகும்.

நீரில் போடுவதன் மூலம், உணவின் சுவை கூடுகிறது. அதன் மணத்தை அதிகரிப்பதும், சமையலை வளமாக்குவதும், பல வகை உணவுகள் செய்வதும் இதன் மூலம் அதிகரிக்கின்றது. இந்த சுவையை வறுத்தல் சுடுதல், புரட்டுதல் மூலம் செய்ய மு டியாது. எனவே நண்பர்களே,, தண்ணீரில் உணவுக்கான பொருட் களை போட்டு, வேக வைத்து உண்பது என்பது நவீன புதிய முறை. இதனை பாபிலோனியர்கள் முதன்முதலாக துவக்கி வைத்ததுடன், மறக்காமல் சுட்ட களிமண் பலகையில் பதிவும் செய்துள்ளனர் என்றால் பாராட்டும் அம்சம்தானே.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply