Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கனிமொழி எம்.பி. கைது: இலங்கை கடற்படையை கண்டித்து சென்னையில் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக் கால் பகுதி தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற் படை யினர் நேற்று கைது செய்தனர். மீனவர்கள் அனை வரும் யாழ்ப்பாணம் பருத்தி துறையில் சிறை வைக்கப்ப ட்டுள்ளனர். இலங்கை கடற் படை யின் இந்த செயலை கண்டித்தும், அவர்களை உடன டியாக விடுதலை செய்ய கோரி யும் தி.மு.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழு வதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டு இருந்தது.

சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி வழ ங்கவில்லை. எனவே மைலாப் பூர்லஸ்கார்னர் அருகில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வட சென்னை, தென்சென்னை, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினர், மகளிர் அணியினர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது, இலங்கை அரசே தமிழக மீனவர்களி டம் அத்துமீறி நடக் காதே. கைதான மீனவர்களை உடனே விடுதலை செய். கண்டிக்கி றோம் ராஜபக்சேயை கண்டிக்கிறோம். மத்திய அரசே அப்பாவி தமிழக மீனவர்களை காப்பாற்று” என்று கோஷம் எழுப்பினார்கள். மீனவர் களுக்கு ஆதரவான வாசகங்கள் அடங் கிய அட்டைகளையும் ஏந்தி வந்த னர். ஆர்ப்பாட்டத்தின்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். நேற்று 106 மீனவர்களை கைது செய்துள்ளனர். எதற் கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போன்ற சம்பவங்கள் நடந் தால் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. 106 மீனவர்கள் கைதானதை கேள்விப்பட்டதும் தி.மு.க. தலைவர் முதல்- அமைச்சர் கலைஞர் மிகவும் வேதனைப் பட்டார். அவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வற்புறுத்தினார்.
தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்ட தால் பெரும் திரளாக வந்திருக்கிறோம். மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும். தமிழர்களின் உணர் வை இதைவிட ஆக்ரோஷமாக வெளிப்படுத் துவோம். மீனவர் சமுதாயத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும். இதுதான் தி.மு.க. தலைவர் கலைஞரின் எண்ணம். கைதான தமிழக மீனவர்களை இலங்கை அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
அதன் பிறகு கனிமொழி தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வல மாக புறப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரக த்தை முற்றுகை யிடுவதற்காக செல்ல முயன்றனர். அவர்களை நாகேஸ் வரராவ் பூங்கா அருகே போலீசார் தடுத்து நிறுத்தி னார்கள். அதை ஏற்க மறுத்ததால் கனிமொழி உள்பட சுமார் 2 ஆயிரம் தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேன், பஸ்களில் ஏற்றப்பட்டு மந்தவெளியில் உள்ள பி.எஸ். எஸ். பள்ளி மைதானத்துக்கு கொண்டு போகப்பட்டனர்.
டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தி.மு.க. மாவட்ட செயலாள ர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ்.பாபு, எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், சங்கரி நாராயணன், முன்னாள் அமைச்சர் கோமதி சீனி வாசன், முன்னாள் எம்.எல்.எ. செங்கை சிவம், கடலூர் இள.புகழேந்தி. மகளிர் அணி துணை த்தலைவர் விஜயா தாயன்பன், முன்னாள் மாவட்ட செய லாளர் பலராமன் மற்றும் நிர்வாகிகள் வி.எஸ். ரவி, வி.எஸ்.ஜெ.சீனி வாசன், கல்யாணசுந்தரம், சுரேஷ்குமார், ஐ.கென்னடி, சேப்பாக்கம் மதன்மோகன், இந்திராநகர் ரவி, இளை ஞர் அணி வி. எஸ்.ராஜ், அகஸ்டி ன்பாபு, ஜே.கருணாநிதி, காம ராஜ், தனசேகரன், உதயசூரியன், ஏழுமலை, அடையாறு லோக நாதன், ஸ்ரீகாந்த், அன்புதுரை உள்பட ஏராளமான நிர்வாகிகள்- தொண் டர்கள் கைதானார்கள்.
(நாளேடு ஒன்றில் கண்டெத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: