Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு

கூகிள் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பினை அதிகரிக் கும் நோக்கில் புதிய பாதுகாப்பு முறையை அமைத்துள்ளது. இத ற்கு 2 step verification என்று பெயர்.

குறித்த கூகிள் கணக்கினை லொகின் (Login) செய்யும் நப ரின் உரி மைத்துவத்தை உறு திப்படுத்தும் முறைதான் இது. குறித்த சே வையினை செய ற்படுத்தும் போது உங்கள் தொலைபேசிக்கு ஒரு இரகசிய இலக்கம் அனுப்பப்படும்(SMS மூலம் அல்லது நேரடி தொலை பேசி அழைப்பு மூலம்).

இந்த இரகசிய இலக்கத்தினை தெரிந்தால் மட்டுமே குறித்த கூகிள் கணக்கினை திறக்க முடியும். தொலைபேசி என்பது எமது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ள காரணத்தினாலேயே கூகிள் இந்த முறையைக் கையாளத் தொடங்கியுள்ளது. 2 step verification னை செயற்படுத்த

1. முதலில் உங்கள் கூகிள் கணக்கின் settings பக்கத்திற்கு செல் லவும்.

2. பின்னர் security பகுதியில் புதிதாக காணப்படும் இணைப்பை க்ளிக் செய்யவும்.

3. பின்னர் உங்கள் கடவுச் சொல்லினை மீண்டும் ஒரு டைப் செய் து உள்நுழைக.

இவ்வாறு செய்தால் இந்த புதிய முறைமையினை செயற்படு த்திக் கொள்ளலாம். இந்த புதிய வசதி உங்கள் கணக்கில் செயற் படுத்தப்பட்ட பின்னர், புதியதொரு விண்டோ (Window) கூகிள் கணக்கினை லொகின் செய்யும் போது தோற்று விக்கப் படும்.

அந்தப் பகுதியில் உங்கள் இரகசிய இலக்கத்தை வழங்கி உள் நுழைய வேண்டும். ஒவ்வொரு லொகின் செயற்பாட்டிலும் கூகிள் SMS மூலமோ அல்லது நேரடி அழைப்பு மூலமோ இரகசிய குறி யீட்டினை அனுப்பிவைக்கும்.

நீங்கள் விரும்பினால் அந்த இரகசிய இலக்கத்தை குறித்த கணி ணியில் 30 நாட்களுக்கு ஞாபகம் (Remember) வைத்துக் கொள்ள முடியும் (இது தனிப்பட்ட  கணிணணியை பாவிப்பவர் களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்).

இங்கு நீங்கள் இரண்டு தொலைபேசி இலக்கங்களை உபயோகி க்கும் வசதியும் காணப்படுகிறது. அதாவது முதலாவது தொலை பேசி தொலைந்து போகுமிடத்து Backup தொலை பேசியாக அடுத்த தொலைபேசியை பாவிக்க முடியும். இந்த Backup இலக் கத்தினை தேர்வுசெய்யும்போது உங்களுக்கு நெருக்கமான இன் னொருவரின் இலக்கத்தை வழங்குவது மிகச் சிறந்தது.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: