Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கேள்விகளை புரிந்துகொள்வதில்தான் வெற்றி

*என்னதான் கஷ்டப்பட்டு படித்து பாடங்களை நினைவில் நிறுத்தி னாலும் தேர்வெழுதும்போது கேள்விகளை கவனமாக படிப்பது மிக மிக அவசியமானது.

* பெரும்பாலான மாணவர்கள் தேர்வெழுதும்போது செய்யும் பெரிய தவறு என்னவென்றால், கேள்விகளை அவசரமாக படித்து விட்டு தவ றான விடைகளை எழுதி விடுவதுதான். குறுகிய நேரமே கொண்ட தேர் வில் விடைகளை விரைவாக எழுத ஆரம் பிக்க மாணவர்கள் அவசர ப்படுவது இயற்கைதான். ஆனால் ஒரு கேள்வியை சரியாக படிக் காமல் தவறான விடைகளை எழுதி விடுவதால், ஏற்படும் அனாவசியமான நஷ்டத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

* மாணவர்கள் ஒரு கேள்வியை படிக்கும்போது அதிலுள்ள கருத் துக்கள் அவர்களுக்கு அறிமுகமானதாகவே இருக்கும். எனவே அவசரக்கோலத்தில் அந்த குறிப்பிட்ட வார்த் தைகளைப் பார்த்த வுடன், இவர்களாகவே ஒரு பதிலை எழுத ஆரம்பித்துவிடுவார்கள். உண் மையில் அந்த கேள்வியில் என்ன கேட்கப்ப ட்டுள்ளது என்பதை விட்டு விடுவார்கள். (உதார ணமாக, பெரியார் சுய மரியாதை இயக்கத்தை ஏன் தொடங்கினார்? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டி ருந்தால், அந்த கேள்வி யை அவசர அவசரமாக படிக்கும் ஒரு மாண வர், பெரியாரின் சுய மரியாதை இயக்கப் பணிகள் என்ன? என்ற ரீதி யில் புரிந்து கொண்டு பதிலெழுதி விடுவார். பிரச்சினையே இங்கேதான் உள்ளது) இதனால் மிகவும் அனாவசியமான மதிப்பெண் இழப்புகளை சந்திக்க வேண்டி யுள்ளது.

* கேட்கப்பட்டுள்ள கேள்வி களு க்கு சரியான முறையில் பதில ளிக்க வில்லையெனில், கேள் வித் தாள்களை திருத்து பவர்க ளுக்கு குழப்ப மும், எரிச்சலும் உண்டாகும். இதனால் நீங்கள் சரியாக பதிலளித்த விஷய ங்களின் மீதும் திருத்துபவருக்கு ஒருவித வெறுப்பு உண் டாகும். எனவே கேள்விகளைப் படிக் கையில் முழுகவனத் தையும் செலுத்திப் படித்து, தேவைப்பட்டால் சில தட வைகள் திரும்ப திரும்ப படித்து கேட்கப்பட்ட கேள் வியை சரியாக புரிந்து கொள் ளவும். மேலும் கேள் வியை படிக்கும்போது முதல் வார்த்தை யிலிரு ந்து, கடைசி வார்த்தை வரை கவனமாக படிக்கவும்.

* இவ்வாறு கவனமாக படித்து சரியாக புரிந்து கொள்ளப்பட்ட கேள் விக்கு, கேட்கப்பட்ட அளவில் எவ்வாறு சுருக்கமாகவும், தெளி வாகவும் பதில ளிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு எழுத ஆரம்பிக்க வேண்டும். பதி ல்களை வளவள என்று எழுதா மல், என்ன கேட்டி ருக்கிறார்களோ, அதற் கேற்ப சுருக்கமா கவும், நுட்பமாகவும் எழுத வேண்டும். இதனால் உங் களின் நேரம் பெரிய ளவில் மிச்சமாகும். திரு த்துபவருக்கும் சுலபமாக இருக்கும்.

* மேலும் கேள்வித் தாளி ல் கேள்விகள் மதிப்பெண்கள் அடிப்படையில் பகுதி பகுதியாக பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். சில பகுதி கேள்வி கள் அனைத் தையும் எழுத வேண்டியிருக்கும், சில பகுதி கேள்விகள் விருப்ப அடிப்படையில்(சாய்ஸ் வகை) தேர்ந்தெடுத்து எழுதுவதாக இருக் கும். எனவே கேள்விகளுக்கான குறி ப்புகளை முதலில் கவ னமாக படிப்பது முக் கியம். இதனால் தே வையற்ற கேள்விகளு க்கு பதில் எழுதுவதை தவிர்ப்பதுடன், நேர த்தை பெரியளவில் மிச்சப்படுத் தலாம்.

மேலே சொன்ன விஷயங்கள் சாதாரணமானவையாக தெரிய லாம். ஆனால் உண்மை என்னவெனில், தேர்வெழுதும்போது கேள் விகள் விஷயத்தில் நிறைய மாணவர்கள் தவறுசெய்து மதிப் பெண்களை கோட்டை விடுகிறார்கள். சாதாரண விஷயம் என்று நாம் நினைப்பதில் தான் சமயத்தில் அதிகம் தவறுசெய்து விடுகிறோம். எனவே கேள்வித் தாளை மிக கவனமாகப் படித்து, என்ன கேட்டுள்ளார்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்வது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறு வதற்கான ஒரு தாரக மந்திரம்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

புகைப்படங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: