Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சனியின் துணைக் கிரகத்திலும் பூமி போலவே வெண்மேகக் கூட்டம்

சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பத ற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்க வாய் ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞா னிகள் கூறியுள்ளனர்.

சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும், அளவில் பூமி போல 760 மடங் கும் பெரியது. சனி கிரகத்துக்கு மொத்தம் 62 சந்திரன்கள் உள்ளன.

சனி கிரகத்தின் தன்மை பற்றியும், அதன் துணைக் கோள்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்காக ‘காசினி ஹைகன்ஸ்’ விண் கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 1997 ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.

7 ஆண்டு பயணத்துக்கு பிறகு சனிக் கோளை இது 2004 ல் சென்றடைந்தது. பின்னர் அதில் இருந்து தனியே பிரிந்த ஹை கன்ஸ் விண்கலம், சனியின் மிகப்பெரிய நிலாவான டைட்டனில் 2005 ல் தரையிறங்கியது.

காசினி ஹைகன்ஸ் தனது ஆராய்ச்சி வேலையை சிறப்பாக செய்து வருவதால், அவற்றின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்க ப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு “காசினி ஈக்வினாக்ஸ் மிஷன்” என்று பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இரு விண்கலமும் 2017 வரை எந்த வித குறைபாடும் இல்லாமல் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது நாசா. இந்நிலையில் டைட் டனை சுற்றி வெண்மேகக் கூட்டங்கள் இருப்பது காசினி விண்க லத்தின் அகச்சிவப்பு ஸ்பெக்ரோமீட்டர் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி நாசா விஞ்ஞானி ராபர்ட் சாமுவேல்சன் கூறியதாவது: டைட்டனின் வளிமண்டலத்தில் மீத்தேன், ஈத்தேன் வாயுக்கள் அதிகம் இருக்கின்றன. அவைதான் வெண்மேகங்களை உருவா க்குவதாக ஏற்கனவே தெரியவந்தது. இவை அச்சு அசலாக பூமிக்கு மேல் நீராவியால் உருவாகும் மேகங்கள் போலவே இருக் கின்றன.

அந்த மேகம் ஆவியானதும் அதில் இருந்து ஹைட்ரோகார் பன்களும், இதர ஆர்கானிக் தனிமங்களும் தூசி போல தொடர்ச்சி யாக டைட்டனில் படிகின்றன என்றும் தெரிகிறது. இவ்வாறு வளி மண்டலத்தில் இருக்கும் மேகம் மற்றும் திவலைகளின் அளவு பற்றி தெரிந்தால் அவை எதனால் ஆக்கப்பட்டது? டைட் டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கண்டு பிடித்துவிடலாம். ஒருவேளை தண்ணீர் இருக்கும் பட்சத்தில், டைட்டனில் அது ஐஸ் பாறையாகத்தான் இருக்கும். இவ்வாறு ராபர்ட் கூறியுள்ளார்.

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: