“நீரின்றி அமையாது உலகு’ என்கிறார் திருவள்ளுவர். நீர்நிலை களின் பாதுகாப்பு கருதி, நம் முன் னோர் பல திருவிழாக்களை உருவாக் கியுள்ளனர். அதில் ஒன்று, மாசி மகம். இந்த விழா கொண்டாடப் படுவதற் குரிய புராணக்கதை இதோ…
ஒரு சமயம் உலகம் அழிய இருந்தது. தேவர்கள் முதலான அனை த்து உயிர் களும் அழிந்து விடும் என்ற நிலை யில், முதலும் முடிவுமில்லாத சிவ னைச் சந்தித்தார் பிரம்மா.
“ஐயனே… உலகம் அழியும் போது, என் னிடமுள்ள படைப்புக் கலன்கள் அழிந்து விடும். அப்படியானால், மீண் டும் உலகம் சிரு ஷ்டிக்கப்பட வே ண்டும்… இந்தக் கலன்களைப் பாதுகாத்தருள வேண்டும்…’ என வேண்டினார்.
“பிரம்மனே… இந்த உலகம் பெரும் வெள்ளத்தால் அழிய இருக் கிறது. கடல் பொங்கி, உலகை மூழ்கடிக்கும். உன் படைப்புக் கலன்
களை, அமு தம் நிரம்பிய ஒரு கும்பத்தில் வை. குடத்தின் நான்கு புறமும் வேத ங்கள், புராணங்கள், இதிகாச ஏடுளைக் கட்டி விடு. குடத்தின் மீது தேங்காய், மாவிலை வைத்து, சுற்றிலும் நூலால் கட்டு. அதை, ஒரு உறியில் வை. வெள்ளத்தில் கும்பத் தை மித க்க விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்…’ என்றார்.
உலகம் அழிந்த நாளில், பிரம்மாவும் அவ்வாறே செய்தார்; வெள் ளத்தில் கும்பம் மிதந்தது. அதையே கவனி த்துக் கொண்டிருந்தார் சிவன். மிதந்த கும்பம், ஒரு இடத்தில் தரை தட்டி நின்றது. வெள் ளம் வற்றி யதும், வேடன் வடிவமெடுத்து, தன் மகன் தர்ம சாஸ் தாவை அழைத் தார் சிவன். அவரிடம், கும்பத்தை உடைக்க உத்தரவிட்டார். சாஸ்தா குறி வைத்தார்; குறி தவற வே, கவ லை யுடன் வில்லை தந்தையிடம் ஒப்ப டைத்தார்.
“மகனே… கவலை வேண்டாம்…’ என்று கூறி, குடத்தின்மீது அம்பெய்தார் சிவன் . அதன் மூக்குப் பகுதி உடைந்து, அமுதம் சிதறி யது. அது ஆங்காங்கே குளம் போல் தேங்கியது. அந்த இடம், “குட மூக்கு’ என்று பெயர் பெற்றது. இதுவே பிற்காலத்தில், “கும்ப கோ ணம்’ என்று பெயர் மாற்றம் பெற் றது.
அமுதத்தில் நனைந்த மணலை சிவன் அள்ளினார். அதை லிங்க மாக்கி, அதற்குள்ளேயே ஐக்கிய மானார். இதனால், “அமுதேஸ் வரர்’ என்றும், “கும்பேஸ்வரர்’ என் றும் பெயர் பெற்றார். மங்கள கர மான உடை யணிந்து, தன் கணவரை த் தேடி, கும்பகோணம் வந்த பார்வதி தேவி, “மங்கள நாயகி’ என்ற பெய ரில் தங்கினாள். புதிய உலகம் தோன் றிய பின், அம்பாள் வந்தமர்ந்த தலம் என்பதால், இது, முதல் சக்திபீடம் ஆயி ற்று.
அதன் பின், பிரம்மாவிடம் படைப்புக் கலன்களை ஒப்படைத்தார் சிவன். உலகம் மீண்டும் பிறந்தது. புதிய ஜீவன்கள் தோன்றின. கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, சரயு, கன்னியா குமரி, பயோட்டணா என்ற ஒன்பது நதிகள் உருவாக்கப் பட்டன. மக்கள், வழக்கம் போல் தங்கள் முன் வினைப் பயன்படி, பாவ – புண்ணியங் களைச் செய்தனர். பாவங்களே மிகுதி யாக இருந் ததால், அவற்றைக் குறை க்க புனித நதிகளில் நீராடினர். பாவச் சுமை தாளாமல் நதிகள் சிரமப் பட்டன. சிவனிடம் முறையிட்டனர் நதி தேவதைகள்.
கும்பகோணத்திலுள்ள மகாமக குளத் தில் நீராடினால், பாவம் குறையும்…’ என அவர் அருளினார். அதன்படி, மாசி மகம் நன்னா ளில் அவை தீர்த்தமாடின. இவர்கள் ஒன்பது பேரும், 12 ஆண்டு களுக்கு ஒரு முறை, மாசி மகத்தன்று நீராட வரும் நாளையே, “மகா மகம்’ என்பர்.
மாசி மகத்தன்று, கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் மட்டுமல் லாமல், கன்னியாகுமரி, வேதார ண்யம், ராமேஸ்வரம் கடல்கள், காவிரி, தாமிர பரணி போன்ற தீர்த்தங்களிலும் நீராடி வரலாம். இவை, பாவத்தை தீர்க்கும் தலங்களாகும். இன்று, புண்ணிய நதிக ளெல்லாம் மக்களின் அலட்சியம் காரணமாக சீர்கெட்டு வரு கின்றன. இவற்றைப் பாதுகாத்து பூஜிக்கவே, இத்தகைய விழாக் கள் உருவாக்கப்பட்டன. அவற்றின் முக்கியத் துவம் அறியாமல் மக்கள் இருக்கின்றனர். இந்த மாசி மகத்தில் இருந்தாவது, நீர் நிலை களைப் பாதுகாக்க உறுதியெடுங்கள்
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்