Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கும் : மத்திய பட்ஜெட் 28-ந்தேதி பாராளுமன்றத்தில் . . .

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பாராளுமன்றத்தின் கூட்டு க்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரையாற்று கிறார். 25-ந்தேதி (வெள்ளிக் கிழமை) ரெயில்வே பட்ஜெ ட்டை ரெயில் மந்திரி மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார்.

இதில் ரெயில்வேயின் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் விடு வது பற்றிய அறிவிப்பு களை வெளியிடுகிறார்.ரெயில் கட்டணம், சரக்கு கட்டணம் உயருமா? அல்லது பயணிகளுக்கு சலுகைகள் அளிக்கப்படுமா? என்பது பற்றிய அறிவிப்பையும் மம்தா பான ர்ஜி வெளி யிடுகிறார்.

இதைத் தொடர்ந்து 28-ந்தேதி (திங்கட்கிழமை) 2011-2012-ம் ஆண்டு க்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கி றார்.இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைகள், விலைவாசி உயர்வை குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார் க்கப்படுகிறது. மேலும் மாத சம்ப ளம் பெறுவோரு க்கான வருமான உச்சவரம்பு உயரும் என்று கூறப் படுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பல் வேறு பிரச்சினைகளை எதிர் நோக் கி உள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பாராளு மன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க் கட்சிகள் கடந்த கூட்டத் தொடரில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

இதனால் கடந்த கூட்டத் தொடர்  முழுவதும் அலுவல் எதுவும் நடத்தப்படாமல் முற்றி லுமாக முடங்கியது. இதனால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூக மாக நடத்துவது குறித்து எதிர்க் கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்தியது. ஆனால் ஸ்பெக்ட் ரம் விவகாரம் குறித் து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை.

ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்பதாக சமீபத்தில் மறைமுகமாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.ஜனாதிபதி உரைக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. பிரத மர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத் தில் ஜனாதிபதியின் உரை ஒவ்வொரு பத்தியாக படித்துப் பார்த் து ஒப்புதல் கொடுக்கப்பட்டது. ஜனாதிபதி உரையில் அரசு இது வரை செய்த சாதனைகளும், இனி அரசு நிறைவேற்ற உள்ள திட்டங்களும் இடம் பெற்று இருக்கும்.

இதனால் ஜனாதிபதி உரைக்கு மத்திய மந்திரி சபை முக்கியத் துவம் கொடுத்து பரிசீலித்தது. ஆனால் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி மந்திரி சபையில் விவா திக்கப்படவில்லை.

பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி அதன் பிறகு பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை கட்சி தலைமையகத்தில் நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி சந்தித்துப் பேசினார். இதில் பட்ஜெட் கூட்டத் தொடரை ஆளும் கூட்டணி எதிர்கொள்வது குறித்து விவா திக்கப்பட்டது.
(நாளேடு ஒன்றில் கண்டெத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: