Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அச்சத்தில் பெற்றோர்கள்: மாணவர்களை தாக்கும் கிரிக்கெட்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 தினங் களே உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழா வை யொட்டி நாடு முழுவதும் கிரிக்கெட் ஜூரம் தொற்றி யுள்ளது. எங்கு பார்த் தாலும், யாரை பார்த் தாலும் ஒரே உலக கோப்பை போட்டி பற்றி ய பேச்சுதான் இடம் பெறுகிறது.
இந்தியாவில் சென் னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங் களூர், அகமதாபாத், நாக்பூர், மொகாலி ஆகிய 8 இடங்களில் போ ட்டி நடை பெறுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
சிறு வயது முதல் பெரிய வயது வரை உள்ளவர்கள் உலக கோப் பை போட்டியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் போட்டியை நேரில் பார்ப்பதற் குரிய டிக்கெட் கிடை க்காமல் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற் றம் அடைந்து உள்ளனர்.
ஐ.சி.சி. போட்டி என்பதால் ஒவ்வொரு ஸ்டேடியத்திலும் ரசிகர் களுக்காக குறைந்த அளவிலேயே டிக்கெட் விற்கப்பட்டது. ஐ.சி. சி. ஸ்பான்சர்கள், கிளப்புகளுக்கு பெரும்பாலான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுமான வரை டிக்கெட் கிடைத்து விடா தா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். டிக்கெட் கிடைக்காவிட்டாலும் டெலிவிஷனில் போட்டியை பார்த்து விடலாம் என்ற நிலையில் உள்ளனர்.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்தான் கிரிக்கெட் பற்றி மிகவும் அதிகமாக பேசுகிறார்கள். அவர்கள் இந்த உலக கோப்பை போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். கிரிக் கெட்டால் மற்ற விளையாட்டுகள் மட்டு மின்றி, மற்ற தொழில் களும் பாதிக்கும் வகையில் மிகுந்த உச்ச நிலையில் உள்ளது.
ஆனால் இதில் பெற்றோர்களின் பாடுதான் திண்டாட்டம். நல்ல காலத் திலேயே பிள்ளைகள் சரியாக படிக்க மாட்டார்கள். உலக கோப்பை போட்டி நடைபெறுவதால் அவர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்த நேரத்தில்தான் பொதுத்தேர்வு நடக் கிறது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந்தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 22-ந்தேதியும் நடக்கிறது.
இதனால் பிள்ளைகளின் படிப்பு பெரிதும் பாதிக்கும் என்ற அச்ச த்தில் பெற்றோர்கள் உள்ளனர். உலக கோப்பை போட்டியை தள்ளி வைத்து இருக்க கூடாதா? என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: