Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று மாலை 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகலா தொடக்க விழா…

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந் தேதி வரை இந்தப் போட்டி நடக் கிறது. இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகிறது.
உலக கோப்பை போட் டியில் 14 நாடுகள் பங்கே ற்கின்றன. “ஏ” பிரி வில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகளும் “பி” பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண் டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணி களும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும் “லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரி விலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். உலக கோப்பை போட்டியின் தொடக்க விழா டாக்காவில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

உலக கோப்பை போட்டியை வங்காளதேசம் முதல் முறையாக நடக்கிறது. இதனால் அங்கு தொடக்க விழா மிகவும் கோலா கலமாக நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளின் பாரம்பரியத்தை சித்தரிக்கும் வகையில் கலைநிகழ் ச்சிகள் நடைபெறும்.

வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசினா இந்தப் போட்டியை தொட ங்கி வைக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலை வர் சரத்பவார் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழா வில் 14 நாட்டு அணிகளின் கேப்டன்களும் ரிக்ஷாவில் வலம் வருகிறார்கள்.

2 மணி 15 நிமிடம் நேரம் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச் சிகளை இ.எஸ்.பி.என்., ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டம் டாக்காவில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியா -வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இதில் பங்கேற்பதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி இன்று காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து டாக்கா புறப்பட்டு சென்றது. கடந்த உலக கோப்பையில் இந்திய அணி வங்காள தேசத்திடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறி யது.

அதற்கு பழிவாங்கும் வகையில் இந்திய அணி வங்காள தேசத்தை வீழ்த்த வேண்டிய நிலை உள்ளது.   உலக கோப்பை யில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

டோனி (கேப்டன்), தெண் டுல்கர், ஷேவாக், காம் பீர், யுவராஜ்சிங், வீராட் கோக்லி, யூசுப்பதான், ரெய்னா, ஹர் பஜன்சிங், ஜாகீர் கான், முனாப்பட்டேல், ஆசிஷ் நெக்ரா, ஸ்ரீசாந்த், பியூஸ் சாவ்லா, அஸ்வின்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: