Monday, August 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் அம்பலம்: 125 ஆண்டுகளுக்கு பிறகு …

125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ- கோலாவின் பார் முலா ரகசியம் வெளியாகி உள் ளது.  அமெரிக்காவின் பிர பல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக் கப்பட்டு விற்ப னையானது. அட்லாண்டா வில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர் பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடு களில் வினியோகிக் கப் படுகிறது.
நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற் கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந் தாளுனர் கண்டுபிடித்தார்.   அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படு கிறது. என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளி யாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக் காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணைய தளத் திலும் வெளியாகி உள்ளது. கோகோ -கோலா தயாரிப்பதற்கான பொருட்களை 2 தொழிலா ளர்கள் மட்டும் தயாரித்து வந்ததாகவும் அவர்கள் மூலம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply