தேர்தலை முன்னிட்டு, அடுத்த சலுகையாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் வீடு வாங்கி யவர்களுக்கான வட்டித் தொகை 284 கோடி ரூபாயை தமிழக அரசு தள்ளு படி செய்துள்ளது.
தமிழகத்திலுள்ள பெரும் பான்மை யான நகரங்களில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்படும் திட்டங்களில், உடனுக்குடன் கிரயப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப் படுகிறது. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பாக, வாரியத்திடம் வீடு வாங்கியவர்களின் நிலைமை படு திண்டாட்டமாகவுள்ளது. வீட்டுக் கான முழுத் தொகையையும் செலுத்திய பின்னும், கிரயப் பத்திரம் கிடைக்காமல் இருப்பவர் களின் எண்ணிக்கை, லட்சத்து க்கும் அதிகம். அரசாணையை வைத்து நிலங்களை கையகப்படுத்தி, வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்திய பின்பும், நில உரிமையாளர்கள் பலரும் நிலத் துக்குக் கூடுதல் விலை கேட்டு, கோர்ட்டை அணுகியதே இந்த பிரச்னைக்கு அடிப்படைக் காரணம்.
சந்தை மதிப்புக்கேற்ப நிலத்துக்கு விலை வழங்கவில்லை என்பது நில உரிமையாளர்களின் குற்றச்சாட்டு; வீட்டு வசதித் திட்டம் நிறை வேற்றிய பின்பே, அப்பகுதியின் நிலத்தின் மதிப்பு கூடியது என்பது வாரியத்தின் பதில். இவ்விரு தரப்புக்கும் இடையே சிக்கி, சின்னா பின்னமாகி வருவது, ஒதுக்கீடு தாரர்கள் தான். கிரயப்பத்திரத்துக்கான போராட்டத்துக்கு ஒவ்வொரு ஆட்சியிலும் தீர்வு வருமென்று எதிர் பார்ப்பது இவர்களின் வாடிக்கை.நில விலையை இறுதி செய்யாமல், வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்தியதால், வீடு வாங்கிய வர்களின் தலையில் பல விதமான வட்டித் தொகையும் சுமத்தப் பட்டது; இவற்றை மொத்தமாக ரத்து செய்ய வேண்டுமென்பது இவர் களின் முக்கியக் கோரிக்கை. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஒதுக் கீடுதாரர்களின் பிரச்னையை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, மாநிலம் முழுவதும் ஒதுக்கீடுதாரர்களைச் சந்தித்து, கருத் துக்கேட்டு அறிக்கை அளித்தது. அதில், பல விதமான வட்டிகளை தள்ளுபடி செய்யுமாறு வாரியத்துக்கு உயர் மட்டக் குழு பரிந்துரைத் தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு க்கு சில பரிந்துரை களை வாரியம் அளித்தது. அதனைப் பரிசீ லித்த தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை, பிப்.14ல் இது தொடர்பான அரசாணை யை (எண்:37) வழங்கி யுள்ளது. இதன்படி, மாதத் தவணைக்கான தண்ட வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி மற்றும் நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத்தில் 5 மாத வட்டி முற்றிலுமாக தள்ளுபடி செய்ய ப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனங் களுக்கான ஒதுக்கீடுகளுக்கு, விலையில் தற்போது நடை முறை யிலுள்ள 10 சதவீத முன் வைப்புத்தொகைக்கு மட்டும் வட்டி வசூலிக்க வேண்டு மென்றும் அரசாணை அறிவுறுத்தியுள்ளது.
ஒதுக்கீடுதாரர்கள் முழுத் தொகையையும் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற்றிருந்தாலும், பெறாமலிருந்தாலும் அந்தத் தொ கைத் திருப்பித் தரப்படாது என்றும், பாக்கித்தொகையை இந்த அரசாணை வெளியிட்ட 4 மாதத்துக்குள் (2011 ஜூன் 13) ஒரே தவணையாகச் செலுத்துவோர்க்கு மட்டுமே இந்த வட்டி தள்ளு படி சலுøயைப்பெற முடியும் என்றும் அந்த அரசாணையில் நிபந்தனை விதிக்கப்பட்டு ள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஒதுக்கீடுதாரர்கள், நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத் தொகை க்கான முழு வட்டியையும் தள்ளுபடி செய்யுமாறு கோரியிருந்தனர். அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டால், வாரியத்துக்கு 800 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்; இப்போது தள்ளு படி செய்யப்பட்டுள்ள தொகை 284 கோடி ரூபாய் மட்டுமே.
கடந்த 5 ஆண்டுகளாக இழுத்தடித்து, தேர்தலுக்கு முன்பாக ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டுள்ள இந்த அரசாணை, ஒதுக்கீடு தாரர்களிடம் வரவேற்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்த வட்டித் தொகை முழுவதும், வாரியத்தின் நிர்வாகக் குளறுபடியால் ஏற்பட்டது தான்; காகிதத்தில் மட்டுமே இருக்கும் இதனை தள்ளுபடி செய்வதால் வாரியத்துக்கு இழப்பு இல்லை என்கிறது ஒரு தரப்பு.ஆனால், பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை இந்த அரசு ஏற்படுத்தி இருப்பதாக மற்றொரு தரப்பு கூறுகிறது. உண் மையில், இந்த அரசாணையால் பலன் பெறும் ஒரு லட்சம் குடும் பங்களின் ஆதரவு, ஆளும்கட்சிக்குக் கிடைக்குமா என்பதைப் பொறு த்திருந்தே பார்க்கவேண்டும்.
நல்ல பரிந்துரை! இந்த அரசாணையில், “எதிர்வரும் காலங்களில் வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களிலும் பய னாளிகள் பயன் பெறும் வகையில் திட்டம் முடிக்கப்படும் நாளும், குடிபுக தயாராகும் நாளும் ஒரே நாளாக இருக்க வேண்டும்; முதலா க்கத்தின் மீதான வட்டி, நிலுவைத் தொகை போன்ற விபரங்களை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்; அதைக் கட்ட தவறும்பட்சத்தில் செலுத் தப்படாத தொகைக்கான வட்டியினை வாரியம் விதிக்கலாம்,’ என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது; இது வாரியத்திடம் வீடு வாங்குவோர்க்கு மகிழ்ச்சியான செய்திதான்.
(( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))