Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிமுகம்: பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைபேசிகள் (வீடியோ)

பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை சாசா (ChaCha) மற்றும் சல்சா (Salsa) என பெயரிடப்பட்டுள்ளன. மேற் படி இத்தகைய கையடக்கத் தொலை பேசிகள் மூலமாக பாவனை யாளர்கள் மிக எளிதாக பேஸ்புக்கினை உபயோகி க்க முடியும்.

பார்சலோனாவில் நடைபெற்று வரும் உலக மொபைல் காங் கிரஸ் நிகழ்விலேயே இவை காட்சிக்கு வைக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பிலானவதந்திகள் நிலவி வந்த நிலையிலேயே இவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

இக்கையடக்கத் தொலைபேசிகள் இரண்டுமே கூகுளின் அண்ட் ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவை ஆகும். கடந்த இரண்டு வருடங்களாக இவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டதாக அந்நிறுவ னம் தெரிவிக்கின்றது.

கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக பேஸ்புக் பாவிப்போரின் வீதம் தொடர்ச்சியாக அதிகரிப்பதனை கருத்தில்கொண்டே இவை தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மற்றைய நிறுவ னங்களும் இத்தகைய கையடக்கத் தொலைபேசி உற்பத்தியில் இறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: