Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் கடவுச்சொல்லை திருடுவதற்கு பத்து நிமிடங்கள் போதும் . . .

ஒரு சில எழுத்துக்களும் எண்களும் தான் நம்முடைய வாழ்வை யும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும் மற்றும் இணைய த்தில் பொருள்களை வாங் கும் போதும், இணை ய வங்கிக் கணக்கு மின்னஞ் சல்களைத் திறக்கும் போது ம் கடவுச் சொல் அல்லது பின் நெம்பர்களைப் பயன் படுத் துகிறோம்.

நாம் பயன்படுத்தும் கடவுச்சொல் நமக்கு மட்டும் உரியதாக இரு க்க வேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாது காப்பு கேள் விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்து கள் எளிமை யானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர் களுக்கு கொண்டாட்டம் தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகி விடும்.

பொதுவாக உலகம் முழுவதுமே கடவுச்சொல்லை/பின் எண்க ளைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010 ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய கடவுச்சொல் பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50சதவீதம் பேர் கடவுச்சொல்லாக பயன் படுத்துகின்றனர் என்றும், இதுபோன்ற 6 இலக்க  கடவுச்சொல் லை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமா னது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன்(Upper Case) சிறப் புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடி க்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட் டுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு கடவுச்சொல்லை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. அதன்படி கடவுச்சொல்லை ஆறு இலக்க மாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்த பட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்து டன் சிறப்புக் குறியீடுகள்(Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல் லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: