Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏர்டெல் மற்றும் ‌வோடஃபோனுக்கு ஏற்றம் தந்த ஜனவரி

மனிதனின் புலனுறுப்புகளில் புதிதாக மொபைல்போனும் சேர்ந் துள்ள நிலையில், ஜனவரி மாதத் தில் மட்டும் 13 மில்லியன் பேர் இந்த ஜிஎஸ்எம் ‌சேவையை புதி தாக பெற்றுள்ளதாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியசேன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, செல்லுலார் ஆபரட்டேர்ஸ் அசோசியசேன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, ஜனவரி மாதத்தில் மட்டும், 13 மில்லியன் பேர் புதிதாக ஜிஎஸ்எம் சேவையில் இணைந் துள்ளதையடுத்து, தேசிய அளவில் ஜிஎஸ்எம் சேவை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 556.6 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டு, டிசம் பர் மாதத்தில் 542.97 மில்லியன்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது. இந்த 13 மில்லியன் பேர் புதிதாக ஜிஎஸ்எம் சேவையில் இணைய பெரும்பாலும் தனியார் ‌தொலைதொடர்பு நிறுவன ங்களே காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசை யில், ஜனவரி மாதத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் புதிதாக 3.3 மில்லியன் பேரும் (மொத்தம் 155.7 மில்லியன்), அடுத்ததாக வோட ஃபோன் நெட்வொர்க்கில் 3.1 மில்லியன் பேரும் (மொத்தம் 127.3 மில்லியன்), ஸ்பைஸ் கம்யூனிகேசன் உடனான ஐடியா செல்லுலார் நெட்வொர்க்கில் 2.51 மில்லியன் பேரும் (மொத்தம் 84.28 மில்லியன்), பொதுத்துறை நிறுவ னமான பிஎஸ்என்எல் நெட் வொர்க்கில் 2.2 மில்லியன் பேரும் (மொத்தம் 83.59 மில்லியன்), ஏர்செல் நெட்வொர்க்கில் புதிதாக 1.66 மில்லியன் (மொத்தம் 51.83 மில்லியன்), எம்டிஎன்எல் நெட்வொர்க்கில் 37,586 ‌பேர் புதிதாக இணைந்து (மொத்தம் 5.15 மில்லியன்) ஜிஎஸ்எம் சேவையை தங்கள் வசப்படுத்தி உள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பல புது தொலை தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதை காட்டுகிறது. இந்த துறையில் கத்துக் குட்டியான எடிசலாட் டீபி நிறுவனத்தில், ஜனவரி மாதத்தில் மட்டும் 70.85 சதவீதம் பேர் புதிதாக இணைந்துள்ளனர். டிசம்பர் 2010ம் ஆண்டில், 2,64,899 பேராக இருந்த வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை, ஜனவரி 2011ல் 4,52,574 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், மற்‌றொரு புதுவரவு நிறுவனமான யூனிநார் நெட் வொர்க்கில் 1.7 மில்லியன் பேர் புதிதாக இணைந்துள்ளனர். எல் லா முன்னணி நிறுவனங்களும் இந்த வெற்றியை கொண் டாடி வரும் நிலையில், வீடியோகான் நிறுவனம் சரிவை சந்தித்து ள்ளது. ஜனவரி மாத காலத்தில் இது, எதிர்மறை விளைவை சந்தி்ததுள்ளது. இதன் வளர்ச்சி 17.87 சதவீதம் சரிந்துள்ளது. டிசம்பர் 2010ம் ஆண்டில் 7.3 மில்லியனாக இருந்த வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை, ஜனவரி 2011ல் 6 மில்லியன் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இந்த அறிக்கையில், டாடா டொகா மோ மற்றும் ரிலையன்ஸ் ‌டெலிகாம் உள்ளிட்ட நிறுவனங்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: