Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிணியின் மெமரியை அதிகரிக்க…

நம் கணிணியின் வேகத்தை நிர்ணயிப்ப தில் Ram முக்கிய பங்கு வகிக் கிறது. நாம் கணிணியில் ஒரே நேரத்தில் பல எண்ண ற்ற வேலைகளை செய்து கொண்டு இருப் போம்.

ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப் போம். இன்னொரு விண் டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப் போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணிணி யின் வேகம் மெமரி அதிக மாக உபயோக படுத்தப்படும். நம் கணிணியும் வேகம் குறைந்து காண ப்படும்.

இந்த மென்பொருளை நீங்கள் நிறுவி விட்டால் போதும் உங்கள் கணிணியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இய ங்கினாலும் அதன் மெமரியை கட்டுபடுத்தி உங்கள் கணிணியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும். இந்த மென்பொரு ளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

டவுன்லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென் பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

இதில் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.
Information Overview
Memory Optimization
System Tuneup
Process Management
Configuration and Settings – என்ற பிரிவுகள் காணப்படும்.

Information Overview : இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

இந்த பிரிவில் நம் கணனி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோகபடுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணனி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம்.

Memory Optimization: இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும். இவை இரண்டுமே நம் கணனியின் மெமரியை கட்டுபடுத்த உதவும் வசதிகளாகும். இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும்.

அதில் உங்களுடைய கணனி இதற்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரியை கட்டுபடுத்தி உள்ளது என்ற விவரம் வரும். இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணனியின் மெமரியை கட்டுபடுத்தும்.

இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.  அடுத்து உள்ள மூன்று பிரிவு களும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதற்க்கும், நம் கணனியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள் இருக்கும்.

Download Software

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: