நடிகர், நடிகைகளுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. முதல் அமை
ச்சரிடம் விருது பெற்ற நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் விழா முடி யும் முன் பாதியிலேயே வெளியேறி விட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட் டது.
பாதியில் கிளம்பிய நடிகர் நடிகைகளை மேடை யிலேயே நடிகை குஷ்பு கண்டித்தார். தற்போது இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமா று:-
விழா மேடையில் முதல்வருடன் நானும் இதர முக்கியஸ்தர்க ளும் உட்கார்ந்து இருந்தோம். திடீரென்று விருது பெற்ற நடிகர், நடிகைகள் உட்கார்ந்து இருந்த பகுதியை பார்த்தேன். காலி யாக இருந்தது. அவர்கள் விருது பெற்ற உடனே அங்கிருந்து புறப் பட்டு சென்று விட்டது தெரிய வந்தது. நான் அதிர்ச்சியானேன்.
பெரியவர்கள் உட்கார்ந்து இருக்கும் விழாவில் அவர்கள் இவ் வாறு நடந்து கொண்டது மரியாதைக்குரிய செயல் அல்ல. எல்லா நடிகர், நடிகைகளும் குடும்பங்களுடன் வந்திருந்தனர். எல்லோ ரும் சேர்ந்து வெளியேறியது அவமரியாதையான செயல். நான் தி.மு.க. சார்பில் விழாவில் பங்கேற்கவில்லை.
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறை யில் அழைக்கப்பட்டு இருந்தேன். வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் கிளம்பி விட்டதாக நடிகர், நடிகைகள் சொல்லலாம். பெருமளவு பணிச்சுமைக்கு நடிவிலும் சினிமா வளர்ச்சிக்காக உழைக்கும் 87 வயதுடைய முதல்வர் 2 மணி நேரம் விழா மேடையில் உட்கார் ந்து இருக்கிறார். நடிகர், நடிகைகளால் ஏன் உட்கார முடியாது. இவ்வாறு குஷ்பு கூறினார்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )