கோ.வி. மணிசேகரன் அவர்கள் பெற்ற விருதுகள்
தமிழ் வளர்ச்சித் துறையின் நான்கு முக்கிய விருதுகள்
1. அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் வழங்கிய தமிழக அரசின் மாமன்னன் ராஜராஜன் விருது
2. வெள்ளிப் பதக்கம், பொன்வேய்ந்த பட்டயம், ரூபாய் 1.5 இலட்சம் பொற்கிழி இவற்றுடன் கூடிய தினத்தந்தி ஆதித்தனார் விருது (மூத்த அறிஞர் விருது)
3. திரு.வி.க• விருது, ராஜா அண்ணாமலை செட்டியார் விருது
போன்ற தமிழ் இலக்கியத்திற்கான 46 விருதுகளைப் பெற்றிருப்பவர்.
ஞானபீட விருதும், கிடைத்துவிட்டது என்றால் இந்தியாவிலேயே அதிக உயரிய இலக்கிய விருதுகள் பெற்றவர் இவராகத்தான் இருப்பார்.
இத்தகைய சிறப்புக்களை பெற்ற இவர், சிறுகதைக்கும் நாவலுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி…
ஜன்னல் வழியாகப் பார்த்தால்,
ஒரு சதுரத்துக்குள் தெரியும் காட்சி
சிறுகதை. . . மொட்டை மாடிக்குப் போய்
வானத்தை அண்ணாந்து பார்த்தால்,
எவ்வளவு பெரிய காட்சி
கிடைக்கும் அதுதான் நாவல். . .