Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீமான் அறிக்கை : தமிழர்கள் ஒன்று திரள வேண்டும், மீனவர்கள் படுகொலையை தடுக்க…

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
இந்திய கடல் எல்லைக்குள் நுழை ந்து மீன் பிடித்துக் கொண்டிரு ந்த தமி ழக மீனவர்கள் 106 பேரை சட்ட விரோதமாக சிறை பிடித்துச் சென் று 15 நாட்கள் சிறையில் அடைந் திருக்கிறது சிங்கள அரசு. இந்நிலை யில் இந்திய கடல் எல்லை க்குள் நுழைந்து 26 மீனவர்களை பிடித்து சென்று இலங்கையில் இள வாலை போலீஸ் நிலையத்தில் வைத்துள் ளனர்.
சிங்கள கடற்படையால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட மீனவர் உயிருக்கு போராடிக் கொண் டிருக்கிறார். இவர்களை இலங் கையில் உள்ள தமிழ் மீனவர்கள் கைது செய்து போலீசிடம் ஒப்படைத்து ள்ளதாக இலங்கை அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கும், ஈழ த்து மீனவர்களுக்கும் மத்தி யில் பகையை தூண்டுகிற வே லையை இலங்கை நேரடியாக வும், இந் தியா மறைமுக மாகவும் செய்து வருகின்றன. இலங்கை கடற்படையால் 500-க்கும் மேற்பட்ட மீனவர் கள் கொல்லப்பட்டும் இன்று வரை கொலைகள் நின்றபாடி ல்லை.
இப்போது கூட்டம் கூட்டமாக எமது மீனவர்களை கடத்தவும் தொட ங்கி விட்டனர்.இந்தியாவை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தமிழர்கள் பிழைப்பு நடத்தும் கடற்பரப்பில் மட்டுமே இந்த அடா வடிகள் தொடர் கின்றன.
தமிழர்களின் கடல் வளம் திட்டமிட்டு பறிக்கப்படும் சதிக்கு எதிராக ஒன்று திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த ஒற்று மையும், போராட்டமுமே மீனவர் படுகொலைகளையும் கடல் வளம் பறிக்கப் படுவதையும் தடுத்து நிறுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: