பளு தூக்கும் கிரேன்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முன்ன ணியில் உள்ள டிஐஎல் ,லிமிடெட் என்றழைக்கப்படும் டிராக்ட ர்ஸ் இந்தியா நிறுவனம், ரூ. 200 கோடி முதலீட்டில் விரிவா க்கத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. மும்பையில் நடை பெற்ற தொழிற் வர்த்தக கண்காடசியில் கலந்து கொண்டபின் பத்திரி கையாளர் களுக்கு பேட்டியளித்த டிராக்டர்ஸ் இந்தியா நிறுவன உயர் அதிகாரி சதீஷ் பட்நாகர் கூறியதாவது, தங்கள் நிறுவனத்திற்கு, கோல்கட்டாவில் பிரமாண்ட உற்பத்தி யூனிட் செயல்பட்டு வருகிறது. இந்த 2011ம் ஆண்டிற்குள், ரூ/ 50 கோடி முதலீட்டில் இந்த யூனிட் மேம்படுத்தப்படுகிறது. மேலும், கோல் கட்டா அருகிலுள்ள காரக்பூரில், ரூ. 150 கோடி முதலீட்டில், புதிதாக உற்பத்தி யூனிட் அமைக்கப்பட உள்ளது. இதுமட்டு மல்லாமல், 70 டன் டிரக் மவுண்டட் கிரேன்களை அறிமுகப் படுத்த உள்ளோம். இதன்மூலம், இந்தியாவில் இத்தகைய அதிக திறன் வாய்ந்த கிரேன்களை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெறுவோம். இது, சீனாவில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 10 டன் கிரேன் உள்ளிட்ட 4 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன்மூலம், கனரக உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்ற முன்னணி நிறுவனங்களான வோல்டாஸ், எஸ்கார்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக விளங்குவோம் என்றும் அவர் கூறினார்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்