பிப்.21 ஸ்ரீ அன்னை அவதார தினம்
* நாம் விரும்பியதை கடவுள் தரமாட்டார், நம் தகுதிப்படியே தான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு எப்போதும் நம்மை பாத்திரமாக்கிக் கொள்ள வேண்டும்.
* இறைவனின் சக்தியே நம்மை இயக்குகிறது என்பதை எண்ணத் திலும் உணர்விலும் ஏற்படுத்திக் கொள்ளத் தவறக்கூடாது. இத ற்கு அடிப்படையானது தீவிரமான ஆர்வமாகும்.
* இறைவன் மீது செய்யப்படும் பிரார்த்தனையில் உறுதியில் லாமல் போனால், எதுவுமே இல்லாமல் போய்விடும் என்பதை மறக்கக்கூடாது.
* பூத்துக் குலுங்கும் மலர்களே நேசத்தின் பிரதிபலிப்பாகும். இர வெல்லாம் நிலவொளியில் பெய்த பனியில் நனைந்த மலர்கள் நம் மனதையும், கண்களையும் குளிர்விக்கின்றன. சூரியனின் ஒளிக்கரங்களின் பரிசத்தால் மொட்டவிழ்ந்து நிற்கும் ரோஜா மலரை பார்க்கும் போது அது நம்மை நேசிப்பது போன்று தோன் றும். அம்மலர் தன்னுடைய அழகை நமக்கு அள்ளித்தருவது ஒரு வகை நேசமாகும். அந்த மலர்கள் அழகைப் பொழிவது போல அன்பைப் பொழியக் கற்றுக் கொள்வோம்.
* மழைத் துளிகள் மண்ணில் விழுந்தவுடன், மழைக்கு நன்றி கூறும் வகையில் பூமியிலிருந்து வண்ணக்கரங்கள் வெளிப்படு கின்றன. அவையே தேவதைக்கு ஒப்பான அல்லிப்பூக்கள். அம்ம லர்கள் இறைவனை வழிபடுவது போன்றே நமக்கு தோன்று கின்றன.
* கரங்களை எதிரிகளிடம் நீட்டாமல் அவர்களிடம் அப்பழுக் கில்லாமல்ல நடந்து கொள்வதுடன், நேர்மை, நியாயத்தின் அடக்கமான வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கினால் வெற்றி நம் அருகில் வரும்.
* மனம் ஒரு “பாலீஷ்’ செய்யப்பட்ட நிலைக்கண்ணாடி. தூய்மை யாக வைத்துக் கொள்வதும், தூசு படியாமல் வைத்துக் கொள் வதும் நமது தொடர்ச்சியான பணியாகும்.
* சத்தியத்தின் இருப்பிடம் தான் இறைவன் இருக்குமிடம். சத்திய த்தையும் உண்மையையும் கடைப்பிடிப்பவனிடமே கடவுள் அருள் பரிபூரணமாய் இருக்கும்.
* இதுநாள் வரை இப்படி இருந்தோமே என்ற குழப்பத்திற்கு ஆளா காமல் “இன்று முதல் இப்படி மாறுவோம்’ என்ற ஆர்வத்துடன் அமையும் சிந்தனையே ஆனந்தமானது.
* மலரின் உண்மைப் பண்புகளைப் பெறுபவன் மகிழ்ச்சியானவன், மலர்களின் உன்னதப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அனை வரும் முயற்சி செய்யுங்கள்.
* விடாமுயற்சியுடன் உறுதியுடன் நீடித்து, சற்றும் தளராத போராட்டமாக தொடர்ந்து மேற்கொண்டால் பாறாங்கல் போன்ற பெரிய தடைகளும் தகர்ந்து பொடிப் பொடியாகி விடும்.
* மலர்கள் இயற்கை அன்னையின் எழில்மிகு வடிவங்கள், நம் கண்களுக்கும், கருத்திற்கும் விருந்து படைக்க அர்ப்பணிக்கப் பட்ட தியாகச் சுடர்கள். நம்மை மகிழ்விக்க மட்டும் மலர்கள் படைக்க வில்லை, அவை நமக்கு அறிவிக்கும் ஆன்மிகங்கள், வேதங்கள், விளக்கங்களாக உள்ளன.
* தன்னம்பிக்கையாளர்கள் நேர்மையுடன் பிரார்த்தித்து விரும் பியதை இறைவனிடம் பெறுகின்றனர். நேர்மையுடன் இருப்ப தும், தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்வதும், நேர்மை யை வளர்த்துக் கொள்வதும் நிறைவான தூய்மையாகும். நேர்மை யுடன் இருப்பது போல் பாசாங்கு செய்ய கூடாது.
* ஆசிரியர் பாடம் கற்பிப்பவரோ, வேலை வாங்குபவரோ இல் லை, உதவி செய்வதுடன் வழிகாட்டுபவராகவும் உள்ளார்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்