திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று முன்னாள் இந்திய
கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான சித்து சென்றார். அவரை தேவஸ்தான அதிகாரி கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அவர் கோவிலில் நடந்த அபிஷேக சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1983-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பிறகுதான் இந்திய அணி உலகப்புகழ் பெற்றது. அப்போதைய அணி வீரர்கள் எந்த அளவுக்கு திறமை யானவர்களாக இருந்தார்களோ அதேபோன்ற வீரர்கள் நம் அணி யில் உள்ளனர்.
இதனால் இந்திய அணி இந்த உலக கோப்பையில் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைக்கும். நமது அணி வீரர்கள் பலர் ஆல் ரவுண்டர் களாக இருக்கிறார்கள். இந்த உலக கோப்பை போட்டி க்கு இந்திய ரசிகர் களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சித்து கூறினார்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )