Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று தொடங்கும் உலக கோப்பை: வங்காளதேச அணியை இந்தியா பழிதீர்க்குமா?

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங் கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.இந்த போட்டியில் மொத் தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன.
தரவரிசை அடிப்படையில் அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ள்ளன. அதன் விவரம்:

குரூப் “ஏ” : ஆஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்), இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கென்யா, கனடா.

குரூப் “பி” : இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம், அயர்லாந்து, நெதர்லாந்து.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 1 முறை மோதும். “லீக்” முடிவில் இரண்டு பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டம் டாக்காவில் உள்ள மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்திலேயே இந்தியா விளையாடுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். 2007-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை போட் டியில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதற்கு வங்காள தேச அணிதான் காரணம்.

அந்த அணியிடம் தோற்றதால் டிராவிட் தலைமையிலான இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வு இதுவாகும்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி வங்காளதேச அணியை பழிதீர்க்குமா என்று எதிர் பார்க்கப்படுகிறது. பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இந்திய வீரர் கள் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் வங்காளதேச அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. மிகுந்த நம்பிக்கை யுடன் உள்ளது. இந்தியாவை மீண்டும் வீழ்த்த முடியும் என்ற நிலையில் அந்த அணி வீரர்கள் உள்ளனர்.

வங்காளதேசம் அணி சமீபத்தில் தனது சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. மிர்பூரில் இந்திய அணி வங்காளதேசத்துடன் மோதிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் 3 முறை சேசிங் (பகல்- இரவு) செய்து வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் மிர்பூர் மைதானம் வங்காள தேசத்துக்கு ராசியானது. அந்த அணி இங்கு 18 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது.

பகல்-இரவாக நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் “டாஸ்” முக்கிய பங்கு வகிக்கும். 2-வதாக பனி துளியில் ஆடுவது சவால் நிறைந்தது. வங்காளதேசத்துக்கு எதிராக தெண்டுல்கர் அதிக ரன்கள் (36 ஆட்டத்தில் 1796 ரன்) எடுத்துள்ளார். ஜாகீர்கான் 23 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: