Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா, வங்கதேசத்துக்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு 371

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின், இன்றைய முதல் சவாலில் வங்கதேச அணிக்கு இந்தியா, 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர் ணயித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் தாகா வில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதை யடுத்து களமிற ங்கிய இந்திய அணி, நிர்ணயிக் கப்பட்ட 50 ஓவ ரில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் எடுத்து ள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்க ளில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் 140 பந்து களில் 175 ரன்கள் எடுத்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமாகும். ‌அவரைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் அபார மாக விளையாடி சதமடித்தார். விராட் 83 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங் கவுள்ளது.

( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: