Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா 43.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய முதல் சவாலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோது கின்றன. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியா 43.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமா கும்.விராத் கோஹ்லி அரை சதம் அடித் துள்ளார். உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் பந்தை எதிர் கொண்ட சேவாக், பவுண்டரி அடித்து, அபார மாக தொடங்கினார். மிர்பூர் மைதா னத்தில் இதுவரை நடைபெற்றுள்ள சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக 330 ரன்கள் குவிக்கப் பட்டிருக் கிறது. கடந்த 2008ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே யான போட்டியின் போது 308 ரன்கள் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: