எகிப்தில் 30 ஆண்டு கால முபாரக் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய போராட்டம் 18 நாட்கள் நடந்தது. இதில் 365 பேர் பலியாகினர். ஆயிரத்
துக்கும் மேற்பட்டோர் காய ம் அடைந்தனர். போராட்டம் வலு வடைந்ததை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி அதிபர் முபாரக் பதவி விலகி னார்.

தற்போது அங்கு ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது.அங்கு ஆட் சி மாற்றம் ஏற்பட்டு நேற்றுடன் ஒரு வாரம் ஆகிறது. எனவே மக்கள் வெற்றி விழா ஊர்வலம் மற்றும் கொண்டாட்டங்களை நடத்தினர். அதற்காக நேற்று பள்ளி, கல் லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வங்கிகளும் மூடப்பட் டன. அனைத்து மக்களும் வேலைக்கு செல்லாமல் விடு முறை எடுத்தனர்.
பின்னர் போராட்டம் நடந்த தக்ரிர் மைதானத்தில் லட்சக்கணக் கில் திரண்டனர். கைகளில் எகிப்து கொடியை பிடித்தபடி தேச பக்தி பாடல்களை பாடினர். ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தன. தங்கள் போராட்டம் வெற்றி பெற அருளிய இறைவனுக்கு நன்றி கூறினர். அங்கு தொழு கையும் நடத்தினர். அதிக அளவில் மக்கள் திரண்டதை தொடர்ந்து தக்ரிர் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.
அந்த மைதானத்தில் 12 வாசல்கள் உள்ளன. அங்கு ராணுவ டாங் கிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் அடுத்த வாரம் புதிய அவசர கால அரசு அமைக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பிரதமர் அகமது ஷபிப் விரைவில் அறி விப்பார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )