இந்தியாவில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களுக்கென, ‘பாரத் பென்ஸ்’ என்ற புதிய பிராண்டு பெயரை டைம்லர் நிறுவனம் அறி முகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கனரக வாகனங்கள் பாரத் பென்ஸ் பிராண்டில் வெளிவரும் என் றும் தெரிவித் துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை தயாரிக்கும் டைம்லர் நிறுவனம்,கனரக வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய கனரக வாகன விற்பனையாளர் என்ற பெருமையையும் டைம்லர் பெற் றுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல்,மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தொழிற் சாலையில் பஸ்,டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில், மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டு பெயரிலேயே கார் களையும், கனரக வாகனங்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில்,இந்தியாவில் வளர்ந்து வரும் கனரக மார்க்கெட்டில் முக்கிய இடம் பிடிக்க நினைத்த டைம்லர், கனரக வாகன உற்பத்திக் கென சென்னைக்கு அருகில் ஓரகடத்தில் ரூ4,400 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி யூனிட் அமைத்து வருகிறது. இந்த யூனிட்டிலிருந்து ஆண்டு்க்கு 36,000 கனரக வாகன ங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப் படும் முதல் கனரக வாகனத்தை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த டைம்லர் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப் படும் கனரக வாகனங்களுக்கு புதிய பிராண்டு பெயரையும் டைம் லர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.அடுத்த ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப்படும் டிரக்குகளை பாரத் பென்ஸ் பிராண்டு பெயரில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்லர் தலைவர் டயட்டர் செட்சீ கூறுகையில்,’சர்வதேச அளவில் டைம் லரின் 5வது கனரக வாகனங்களுக்கான பிராண்டாக பாரத் பென்ஸ் உதயமாகியுள்ளது.இந்திய கனரக வாகன சந்தையில் முதன்மையான இடத்தை பிடிக்க விரும்பு கிறோம். இந்தியாவுக் கென நம்பகத்தன்மை வாய்ந்த வாகனங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துவோம்,’ என்றார்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )