Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜே.பி.சி., புதன் கிழமைக்குள் அமைப்பதில் அரசு ஆர்வம்

பார்லி.,கூட்டுக் குழு அமைப்பது குறித்து வரும் புதன் கிழமைக்கு முன்னதாக முடிவு எடுக்கப்படும்,” என, பார்லி., விவகார அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறினார். அவர் டில்லியில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பார்லி.,யின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21ம் தேதி துவங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் சுமூகமாக நடக்கும் என, நம்புகிறேன். பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட பின், மார்ச் 16 ல் ஒத்தி வைக்கப்படும் சபைகள், மீண்டும் ஏப்., 7ல் துவங்கும். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், துறைகள் தொடர் பான பார்லி  மென்ட் நிலைக் குழுக்கள், மானியக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கும். வரும் 21ம் தேதி, பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரை நிகழ்த்துகிறார். வரும் 25ம் தேதி, 2011-12ம் ஆண்டு க்கான ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். அதே நாளில், பொருளா தார ஆய்வ றிக்கையும் சமர்ப்பிக்கப்படும். வரும் 28ம் தேதி, பொது பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்., 21ல் முடிவுக்கு வரும். பார்லியின் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமூக மாக நடக்கும் என, நம்புகிறேன். இது தொடர்பாக எதிர்க் கட்சி களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை முன்னே ற்றப் பாதையில் செல் கிறது. ஊழல்கள் குறித்து விசாரிக்க பார்லி கூட்டுக் குழு அமை ப்பது குறித்து, வரும் புதன் கிழமைக்குள் முடிவு எடுக்க ப்படும், என்றார்.

( நாளேடு கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: