Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தோனி : வெற்றியுடன் துவக்குவோம்

வங்கதேசத்துக்கு எதிராக கடந்த முறை சந்தித்த தோல்வி பற்றி நினைக்கவில்லை. இம்முறை உலக கோப்பை தொடரை வெற்றி யுடன் துவக்குவோம்,” என, இந்திய கேப்டன் தோனி தெரிவி த்தார்.

பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போ ட்டி இன்று துவங்குகிறது. மிர்புரில் நடக்கும் போ ட்டியில் இந்தியா, வங்க தேச அணி கள் மோதுகின்றன. கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை தொடரில் இந் திய அணி, வங்க தேசத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் , லீக் சுற்று டன் நடையை கட்ட நேர்ந்தது. என வே, இம்முறை மிகவும் கவனமாக விளையாட வேண்டியது அவசியம்.

இப்போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:
உலக கோப்பை தொடர் இம்முறை இந்திய துணை கண்டத்தில் நடப்பது சாதகமான விஷயம். இதனை பயன்படுத்தி வெற்றி பெ றாவிட்டால், வேறு எங்கும் வெற்றியை வசப்படுத்த முடியாது. தொடரை நடத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி எதுவும் இல்லை.

இந்திய துணை கண்டத்து ஆடுகளங்கள், சுழற்பந்துவீச்சுக்கு அதி கம் ஒத்துழைக்கும். இதனை உணர்ந்து வங்கதேச அணியில் மூன்று இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். “ஸ்பின் னர் களையே’ பெரிதும் சார்ந்து உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், வங்க தேசமும் சிறந்த அணி தான். எனவே, இன்றைய போட்டியில் குறைத்து மதிப்பிட மாட்டோம்.

உலக கோப்பை பயிற்சி போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூ சிலாந்தை எளிதாக வீழ்த்தினோம். இதன் மூலம் சிறப்பான முறையில் ஆயத்த மானோம். இன்று நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டி யிலும் சாதித்துக் காட்டுவோம். கடந்த முறை வங்கதேசத்திடம் சந்தி த்த தோல்வி பற்றி நினைத்து பார்க்கவில்லை. இது, இம்முறை எவ் வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மீண்டும் இந்த சோகம் அரங்கேறி விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். தொடரை வெற்றி யுடன் துவக்க காத்திருக்கிறோம். இவ்வாறு தோனி கூறினார்.

முதல்வர் வாழ்த்து
டேஹ்ரா டூன்: இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டு மென, உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் நிஷான்க் வாழ்த்தி யுள்ளார். இது தொடர்பாக கேப்டன் தோனியை “போன்’ மூலம் தொடர்பு கொண்ட இவர்,””உங்கள் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வெல் ல வேண்டும் என உத்தர காண்ட் மக்கள் விரும்புகின்றனர்,”என, தெரி வி த்தார்.

( நாளேடு கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: