Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்: லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி

லிபியாவில் கடாபிக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தில் கடந்த 3நாட்களில் 84பேர் ‌கொல் லப்பட்டுள்ளனர். மேலும் பக் ரைன் போராட்டத்தில் இந்தியர் கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்றும் அவர்கள் நிலை குறித்து இந்திய வெளியுறவு துறை விழிப் போடு கண்காணித்து வருவதா கவும் இந்த துறைக் கான அமைச்சர் எஸ்.எம்.,கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கிளர்சியுடன் பல்வேறு அரபுநாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராட் டக்களத்தில் குதித்து வருகின்றனர். பக்ரைன், ஏமன் நாடு களில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது .பக்ரைனில் இன்று டன் 7வது நாளாக மன்னருக்கு எதிராக போராட்டம் வலுப் பெற்றாலும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

பக்ரைனில் மனாமாவில் உள்ள முத்து சதுக்கத்தில் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை வீசியும் , துப்பாக்கியால் சுட்டும் களைத்தனர். 5 பேர் பலியாகிவிட்டனர். 20 க்கும் மேற் பட்டோர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு ள்ளனர். பாதுகாப்பு கார ணமாக ஏமன், பக்ரைன், லிபியா போன்ற நாடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என தங்களது நாட்டவர்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் எச்சரிக்கை விடுத்து ள்ளது.

இந்தியர்கள் பக்ரைனில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர்.

இவர்கள் நிலை குறித்து இந்தியா கவனத்துடன் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவு துறை அமைசசகம் கூறியு ள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எஸ்.எம்.., கிருஷ்ணா கூறுகையில்; அரபுநாடுகளின் உள்கட்ட விவகாரம் குறித்து கரு த்து எதுவும் சொல்ல முடியாது . அங்குள்ள தூதரக அதிகாரிகள் மூலம் கவனித்து வருகிறோம். தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். இந்தி யர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். யாரும் கவலைப்பட வேண்டியதில்லை இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ், மற்றும் செய்தி தொட ர்பாளர் விஷ்ணு பிரகாஷ் ஆகியோர் பக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டு வருகி ன்றனர். விரைவில் அங்கு அமைதி திரும்பும் சூழல் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லிபியாவில் தொடர் கலவரத்தில் இது வரை 84 பேர் கொல் லப்பட்டு ள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: