சுப்ரீம் கோர்ட்டில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. அத்
வானி உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக நேற்று மேல் முறை யீடு செய் துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த பா. ஜனதா கட்சி காங்கிரஸ் ஊழல் விவகாரங்களில் இரு ந்து மக்களை திசை திரு ப்ப முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடே கர் கூறியதாவது:-
அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை வழக்கில் இருந்து விடு வித்து பலமாதம் ஆன பிறகு சி.பி.ஐ. மேல் துறையீடு செய்து ள்ளது. பல்வேறு ஊழல் வழக்கில் இருந்து காங்கிரஸ் மக்களை திசை திருப்பும் முயற்சி செய்வதாக கூறினார்.
மேலும் சி.பி.ஐ.யை காங்கிரஸ் கட்சி தங்கள் கைபாவையாக செயல்படுத்துவதாகவும் காங்கிரஸின் நெருக்கடி காரணமாக சி.பி.ஐ. மேல் முறையீடு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அயோத்தியில் பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 இல் இடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கீழ் கோர்ட் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட 20 பேரை விடுவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )