Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்பெக்ட்ரம் விசாரணை: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் . . .

2 ஜி ஸ்பெக்டரம்” விவகாரம் குறித்து விசாரணை நடத்த பாராளு மன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வற்புறுத்தி வருகி ன்றன.   பாராளு மன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது கூட்டுக்குழு கோரிக்கை யை மத்திய அரசு நிராகரி த்தது. இதனால் கூட்டத்தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பாரதிய ஜனதா வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொது கணக்குகுழுவின் விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. எனவே பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.   இதற்கிடையே வருகிற 21-ந் தேதி தொடங்க இருக்கும் பாராளு மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

இது தொடர்பாக பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பாராளுமன்ற கூட்டுக் குழு அமைப்பது குறித்து 22-ந் தேதி அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால் இந்தமுறையும் பாராளு மன்ற கூட்டத்தை நடத்தவிட மாட்டோம் என்று பாரதிய ஜனதா கூறியுள்ளது. மற்ற எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவாக உள்ளன. இந்த நிலையில் கூட்டுக்குழு அமைப்பது குறித்து 23-ந்தேதி முடிவு செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி பன்சால் தெரிவித்துள்ளார்.

எனவே, அன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.   பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டால் அதில் 30 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள். 20 பேர் பாராளுமன்ற எம்.பிக்களாகவும், 10 பேர் ராஜ்யசபை எம்.பி.க்களாகவும் இருப்பார்கள் என்று மத்திய அரசு வட்டார ங்கள் தெரிவிக்கின்றன. 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டால் 14 பேர் பாராளுமன்றத்தில் இருந்தும், 7 பேர் ராஜ்யசபையில் இருந்தும் இடம் பெறுவார்கள். பாராளுமன்றம், ராஜ்ய சபையில் உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பாராளுமன்றத்தில் தற்போது உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கைபடி காங்கிரஸ், பா.ஜனதா, திரினாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடிகட்சி, பகுஜன்சமாஜ், ஐக்கிய ஜனதாதளம், தி.மு.க. ஆகிய கட்சிகள் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற வாய்ப்புள்ளது. குறைந்த எண்ணிக்கைகொண்ட எம்.பி.க்கள் இந்த குழுவில் இடம் பெற முடியாது. அந்த வகையில் அ.தி. மு.க., தேசியவாத காங்கிரஸ், முஸ்லிம்லீக் போன்ற கட்சிகள் இடம் பெற வாய்ப்பு இல்லை.

இதுபோல் மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம் பெறமுடியாது என்றாலும், மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ராஸ்டிரீய சோசலிஸ்டு கட்சி, பார்வார்டுபிளாக் ஆகிய இடது சாரி கட்சிகள் நான்கும் சேர்ந்து தங்களை ஒரு குழுவாக ஏற்று உறுப்பினர்கள் இடம் பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக் கை விடுத்துள்ளன. எனவே அவர்களுக்கு வாய்ப்புள்ளது என்று மத்திய மந்திரி பன்சால் கருத்து தெரிவித்துள்ளார்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: