அன்புள்ள சகோதரிக்கு —
தற்போது, எனக்கு வயது 70. நான், 45 வருடங்களாக விஜய வாடாவில் உள்ளேன். வால் பாறையில் பிறந்து, வளர் ந்த தெலு ங்கன். சிறு வயதி லேயே, தாய் இறந்து விட் டார். என் தந்தை, எனக்கு 13 வயதிருக்கும் போது, என் னை விட மூன்று வயது மூத்த வளை, சொத்திற்காக மறுமணம் செய்து கொ ண்டார். என் சித்தி, மிக குண் டாக, குள்ளமாய் இருப் பாள். என் தந்தைக்கு, ஆந்திராவில் நல்ல வியாபாரம்; ஆதனால், அங்குதான் அதிகம் இருப்பார். நான் நல்ல படிப்பாளி; எல்லா விளையாட்டிலும் கெட்டி. என் அப்பா, ஏதா வது உறவு முறை சொல்லி, அவர் வயது பெண்களை அழைத்து வந்து, வீட்டில் தங்க வைப்பார். எனக்கு அப்பெண்களை எள்ள ளவும் பிடிக்காது. தந்தையின் ஒழுக்க த்தைப் பற்றி, மிக சந்தேக ப்படுவேன். சித்தி, என்னிடம் மிக அன் பாக நடந்து கொள்வாள்; அவளுக்கு குழந்தைப் பேறு இல்லை. அப்பா, இங்கு இருக்கும் போதும், என்னுடனேயே இருப்பாள் என் சித்தி. நான் இருள் கவ்வத் தொடங்கினாலே, மிகவும் பயப்படு வேன்; சரியான பயந்தாங்கொள்ளி. என்னை கட்டிப்பிடித்து, பயத்தைப் போக்கி, உறங்க வைப்பாள்; நன்றாக பாடுவாள். மிகச் சுவையாக சமைப்பாள். என்னை தினமும் நன்றாக குளிப்பாட் டுவாள். சனிதோறும் எண்ணைக் குளியல். உடம்பு முழுவதும் எண் ணெய் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்குப் பின், நன்றாக குளிப் பாட்டுவாள். திருமணமான மூன்றாம் வருடம், விஜய வாடாவில், தந்தை தவறி விட்டார். சித்தி, உறவினர்கள் என்று, எல்லாரும் போய், தந்தையின் காரியங்களை நிறைவேற்றி னோம். பின், வியாபாரத் திற்காக விஜயவாடாவிலேயே தங்கி விட்டோம். பின், கணவன் – மனைவி போல், நெருக்கமாய் இருந் தோம். எங்களுக்கு குழந்தை இல்லை. “உன் தந்தை என்னுடைய சொத்தைத்தான் அனுபவித்தார். ஒருமுறை கூட, எனக்கு எந்த சுகமும் அளிக்க வில்லை…’ என, அடிக்கடி கூறுவாள். எனக்கு தாரமாகவும் இருந்து, என் பயத்தாங் கொள்ளி சுபாவத்தை போக்கி, மிக தைரிய மானவனாக்கினாள். இடையில், சித்தியின் மூலம், எனக்கு பெண் கொடுக்க பெரிய பணக்கார குடும்பங்கள் முன் வந்தன. சித்தி என்னை மிக வற்புறுத்தியும், மறுத்து விட்டேன். என் வாழ்வில் பங்கேற்க வருபவளிடம், அந்தரங் கங்களை மறைத்து, அவளை ஏமாற்ற விரும்ப வில்லை. இறுதி யாக, இருவரும் ஒரு தாயில்லா சிறுவனை தத்து எடுதோம். டேராடூனில் நல்ல முறையில், படித்து வருகிறான். மிகச் சிறந்த மாணவனாய் விளங்குவதுடன், ஐ.ஏ.எஸ்., படிக்க எண்ணம். தங்களுடன் சில பகிர்வுகள்…
* நாங்கள் பாவப்பட்டவர்களா? ஏன் இப்படி?
* ஒழுக்கமானவர்களா? நல்லவர்களா?
*தாய்க்கும், தாரத்துக்கும் வேறுபாடில்லை யெனில், பகவான் மன்னிப்பாரா? தவறு எனில் யார் காரணம்?
* நாம் புரியும் நன்மைக்கும், பாவத்திற்கும் பகவான் காரணம ல்லவா? அவன் அன்றே சூழ்நிலைகளையும், இந்த புத்திகளையும் படைக் கிறானா?
* எங்கள் உறவு சொல்லி, யாரும் அழைத்தால், நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை; எந்த நெருடலும் இல்லை.
* சொத்துக்களை இருவருமே அனுபவித்து விட்டு, இருவருக்கும் பின், மகன் விருப்பப்படி… எங்கள் உறவு, தாய் – தந்தை என்பதில், எள்ளளவும் அவனுக்கு சந்தேகம் இல்லை.
* எந்த உறவினரிடமும் சரியான தொடர்பில்லை என்பதால், யாருக்கும் எந்த ஐயப்பாடும் இல்லை.
* இன்றும், தாம்பத்யத்தையும், வளமான வாழ்க்கையையும், நன்றாக அனுபவித்து வருகிறோம்.
* தமிழகம் போன்று அல்லாது ஆந்திராவில் பெரிய தவறுகள் கண்ணுக்கு படுவதில்லை; இங்கு எல்லாம் சகஜம்.
* எங்கள் உறவு தவறு என்றால், பரிகாரமே இல்லையா?
* என்னிடம் மயங்கிய சித்தி, பலமுறை, நான் மட்டும் கிடைத் திருக்காவிட்டால், வேறு யாரிடமோ சோரம் போக விருந்த தாகவும் அல்லது தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்ததாகவும் கூறுவாள். இயன்றால் தெளிவு படுத்துங்கள்.
— இப்படிக்கு,
அன்பு சகோதரன்.
அன்புள்ள சகோதரருக்கு —
உங்கள் கடிதம் கிடைத்தது. எதையும் ஒளித்து மறைக்காது, அப்பட்டமாக எழுதியிருந்தீர்கள். இந்து மதம், “திருமணம்’ பற்றி என்னென்ன கூறுகிறது என பார்ப்போம்…
*இந்து மதம், திருமணத்தை, “சமஸ்காரம்’ என, அழைக்கப்படும் மதக் கோட்பாடுகளில் ஒன்று என்கிறது.
*திருமணத்தின் உள்நோக்கம், உடலின்பத்தை அனுபவிப்பதும், குழந்தை பெறுவது மட்டுமல்ல. ஒரு மனிதன், தன் பாவக் கறைகளை நீக்கி, அறநெறிகளின் படி வாழ, மதம் காட்டும் ஒரு பாதையே, திருமண வாழ்வு.
*இந்தியாவில், முன்பு எட்டு வகை திருமணங்கள் இருந்தன. பிரும் ம மணம் (மாப்பிள்ளை வீட்டாரிடம் எந்த பிரதிபலனும் எதிர் பாராது, பெண்ணைக் கொடுத்தல்), அசுர மணம் (மாப்பி ள்ளை வீட்டாரிடம், பெண் வீட்டார் பிரதிபலன் எதிர்பார்ப்பது), தெய்வ மணம், அர்ஷ மணம், பிரஜாபத்ய மணம், காந்தர்வ மணம், ராட்சச மணம், பைசாக மணம். பிரும்ம மணமும், அசுர மணமும் மட்டுமே வழக்கில் உள்ளன.
* சபிண்ட உறவு உள்ளோர், மணந்து கொள்ளக் கூடாது. தாய் வழியில் மூன்று தலைமுறைக்குள்ளும், தந்தை வழியில் ஐந்து தலைமுறைக்குள்ளும், வராத உறவுமுறையைக் கொண்ட ஒருத்தியை, ஒருவன் மணக்கலாம். சபிண்டம் என்றால், ஒரே பிண்டத்தை சேர்ந்தவர்கள் என பொருள். அக்கருத்தையே மிதாட்சரம் என்ற நூலும், தாயபாகம் என்ற நூலும் ஏறக்குறைய வலியுறுத்துகின்றன.
* இந்து திருமண சட்டப்படி, ஒரு ஆண் மணக்கக் கூடாத பெண்கள் யார் யார் தெரியுமா?
ஏறுவழி உறவு முறைப்பெண், ஏறுவழி உறவுக் கரரின் மனைவி அல்லது இறங்குவழி உறவினரின் மனைவி, சகோதரனின் மனைவி, தந்தையின் சகோதரரின் மனைவி, தாயின் சகோதரி யின் மகள் (சில வகுப்பில் விலக்கு உண்டு) தந்தையின் சகோதரி, தாயின் சகோதரி, தந்தையின் சகோதரி மகள் (விலக்கு உண்டு), தந்தையின் சகோதரர் மகள், (விலக்கு உண்டு.) தவிர, இந்து திருமணம் சட்டம், ஒரு ஆணும், பெண்ணும் மணந்து கொள்ள, பல நிபந்தனைகளை விதிக்கிறது.
* திருமணம் செய்து கொள்ளும் ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடை பெறும் சமயத்தில், வேறொரு கணவனோ, மனைவியோ உயிருடன் இருக்கக் கூடாது. மணமக்கள் மன நிலை பிறழ்ந்தவராக இருத்தல் கூடாது. மணமகனுக்கு திருமண வயது 21, மணமகளுக்கு 18. மணமக்களுக்கு இடையே தடை செய்யப்பட்ட உறவு முறையோ, சபிண்ட உறவுமுறையோ இருத்தல் கூடாது.
இந்த விஷயங்களை உங்களுக்கு நான் விரிவாய் ஏன் கூறுகிறேன் தெரியுமா?
உங்களுக்கும், உங்கள் சித்திக்குமான உறவுமுறையை, உலகின் எந்த திருமண சட்டமும் அங்கீகரிக்காது. அறியாத வயது சித்தி, அறியாத வயது உங்களை, “எக்ஸ்ப்ளாய்ட்’ செய்து விட்டார். குழந் தையை தத்தெடுத்ததாக கூறியுள்ளீர் கள். குழந்தை முறையற்ற உறவில் பிறந்ததை மறைத்து எழுதியிருக்கிறீர்கள் என சந்தேகப் படுகிறேன். குழந்தையின் தந்தையாக உங்கள் இனி ஷியலை கொடுங்கள். தத்து மகனின் தாயாக, சித்தி பெயரை கொடுத்து விடாதீர்கள்.
உலக மனித சமுதாயம் வகுத்துக் கொடுத்த உறவுமுறைகளை, கேவலம் உடல் சுகத்துக்காக படி தாண்டி இருக்கிறீர்கள். அது மட்டுமல்லாமல், அதே தவறை சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல், அரை நூற்றாண்டாய் தொடர்ந்து கொண்டுள்ளீர்கள். சித்திக்கு, தந்தையின் மரணத்திற்கு பின் மறுமணம் செய்வித்து, நீங்களும் தகுந்த பருவத்தில் வேறொரு பெண்ணை மணந் திருக்க வேண்டும். சமூக கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை நீங்கள். உங்களை பகவான் மன்னிப்பானா என்பதை, அவனே அறிவான்!
நடந்த தவறுக்கு, உங்கள் தந்தை, சித்தி, நீங்கள் மூவருமே காரணம். உங்களின் தவறுக்கான பிராயசித்தத்தை, பரிகாரத்தை இறைவன் உங்களுக்கு உணர்த்தட்டும். உலகின் நல்லது, கெட் டதுக்கிடையே மனிதனை போதிய அறிவு கொடுத்து, உலவச் செய்கிறான் பகவான். தன்னிச்சையாக நீங்கள் செய்யும் காரி யங்களுக்கு, பகவான் மீது பழியைப் போடாதீர்கள்.
அந்திமக் காலத்திலாவது, இருவரும் உங்கள் உறவை கத்தரி த்துக் கொள்ளுங்கள். தத்து மகனுக்கு, உங்களது புதிய உறவை அப்பட்டமாக்குங்கள். சித்தியின் சொத்து, அவனுக்கு பாட்டி வழி சொத்தாகவும், உங்களின் சொத்து, அவனுக்கு தத்து தந்தை வழி சொத்தாகவும் கிடைக்கட்டும். மீதி வாழ்நாளில், உங்களுக்குத் தெரிந்து நடக்கும், நான்கைந்து முறையற்ற உறவுகளையாவது தடுத்து நிறுத்துங்கள். அதுவே, உங்கள் பாவங்களுக்கான பரிகார மாக அமையட்டும்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத். (தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)