Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகப் பொருளாதார சமச்சீரற்ற நிலைக்கு இந்தியா காரணம் அல்ல: பிரணாப் முகர்ஜி

உலகப் பொருளாதார சமச்சீரற்ற நிலைக்கும், சர்வதேச சந்தை யில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் இந்தியா பொறுப்பேற்க முடியாது,” என, இந்திய நிதிய மைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியு ள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஜி- 20 நாடுகளின் நிதியமை ச்சர்கள் மாநாடு இரண்டு நாட்களாக நடந்தது. இதில், அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசிய தாவது: உலகப் பொருளாதார சமச் சீரற்ற நிலைக்கும், சர்வ தேச சந்தையில் நிலவும் ஏற்றத் தாழ்வு களுக்கும் இந்தியா காரணம் இல்லை. சர்வதேச சந்தையில், உற்பத்திப் பொருட்களின் விலை, அபரிமிதமாக கூடுவதற்கும் இந்தியா பொறுப்பாக முடி யாது. பொரு ளாதார வளர்ச்சியில் முன்னேற்றப் பாதையில் உள்ள இந்தியா, பருவ கால காரணி களால் எளிதில் பாதிக் கப்படுகிறது. அதனால், உணவுப் பொருட் களின் விலைகள் அதிக ரிக்கின்றன. பருவநிலை மாற்றம் காரண மாக, இந்தியாவில் உணவுப் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்க அதிகரிப்பு, மக்களின் நுகர்வு முறையிலும் மாற்ற த்தைக் கொண்டு வந்துள்ளது.

உணவுப் பணவீக்கம் அதிகரிப்பதால், பொதுவான பணவீக்கமும் அதி கரித்து, பரந்த அளவிலான பொருளாதார மேலாண்மைக்கு சவால் விடு வதாக அமைகிறது. சர்வதேச அளவில், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால், இந்தி யாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாக உள்ளது.உலக பொருளாதாரம், மந்த நிலையில் இருந்து மீண்டும் வந்தாலும், அது எளிதில் உடையக் கூடிய வகையிலேயே உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளால் மீண்டும் பாதிக்கப் படக் கூடிய நிலையிலேயே உள்ளது.உற்பத்தி மற்றும் உணவுப் பொரு ள் விலையேற்றம், அதிகரித்து வரும் வேலை யில்லாத் திண்டாட்டம், சில நாடுகளில் நிலவும் உயரிய பண வீக்கம் போன்றவையே இதற்கு காரணம். ஐரோப்பாவில் குறிப் பாக அயர் லாந்து மற்றும் கிரீஸ் நாடுகள் சமீபத்தில் சந்தித்த கடன் பிரச்னை களால், உலக பொருளா தார மீட்பானது மீண்டும் சீர் குலையும் நிலைக்கு தள்ளப்பட்டது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: