இந்தியாவில், மொபைல் போன்களைப் பொறுத்தவரை, மக்கள் நம்பிக்கையை அதிகம் பெற்ற முதல் நிறுவனமாக நோக்கியா இடம் பெற்றுள்ளது. ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (TRA Trust Research Advisory) என்ற நிறுவனம் அண் மையில், இந்தியாவில், எந்த மொ பைல் நிறுவனம் மக்களிடையே அதிக நம்பிக்கையைப் பெற்றுள்ளது (“Brand Trust Report, India Study 2011) என்ற ஒரு கணிப்பை மேற் கொண்டது. 16,000 மொபைல் போன் மாடல்கள் குறித்து ஒன்பது நகர ங்களில், 2310 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை டாட்டா மற்றும் சோனி நிறுவனங்கள் பெற்றுள்ளன. அடுத்த இடங்கள் எல்.ஜி. மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்குக்
கிடைத்துள்ளன. இது விற்ப னையை அல்லது போன் களின் திற னைச் சார்ந்தது அல்ல. மக்கள் கொண்டுள்ள நம்பிக் கையை அறிவது. எனவே அந்த நம்பிக்கையை 61 தன்மைகள் கொண்டு மக்களிடம் சோதனை நடத்தப்பட்டது என இந்த ஆய்வினை மேற்கொண்ட ட்ரா நிறு வனத்தின் தலைமை நிர் வாகி சந்திர மௌலி தெரி வித்தார்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்