Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினிமாவுக்கு முழுக்கு: நடிகை அமலா பால்…

வீரசேகரன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, சிந்து சமவெளியால் சர்ச்சையின் நாயகி யாக உருவெடுத்து, மைனா மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். அதிலும் சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் சல்லாபிக்கும் காட்சியில் நடித்ததன் மூலம் மாத‌ர் சங்கங்கள் கொடுத்த பப்ளிசிட்டியால் பட்டிதொட்டி யெங்கும் பிரபலமான அமலா பாலுக்கு அடுத்தடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. இனி சர்ச்சையான கதா பாத்திரங் களில் நடிப்பதில் லை என்ற முடிவு க்கு வந்திருக்கும் அவர், புதிய படங்க ளில் கதை யை நன்கு கேட்ட பிறகே தேர்ந் தெடுத்து வரு கிறார். தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர் களும், இயக்குனர்களும் அமலாவிடம் கால் ஷீட் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. பள்ளிப்படிப்பை முடித்த கையோடு தமிழ் சினிமாவில் நடிக்க வந்து விட்ட அமலா வுக்கு, கல்லூரி யில் படிக்க வேண்டும் என் பது ஆசை யாம். அடுத் தடுத்த பட வாய்ப்பு களால் அந்த ஆசை நிறைவேறாமல் இருந்து வந்தது. இப்போது மீண்டும் கல்லூ ரியில் சேர்ந்து படிப்பை தொடர அமலா பால் திட்டமிட்டி ருக்கிறா ராம். இத னால் விரைவில் முறை யான அறிவி ப்புகளுடன் சினிமாவுக்கு இருந்து தற்காலிக முழுக்கு போடப் போகி றாராம். பட்டம் வாங்கிய பிறகே நடிப்பில் கவனம் செலுத்தப்போவதாக அமலா பால் கூறி யிருக்கிறார்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: