Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொகுதி உடன்பாடு: தி.மு.க.-அ.தி.மு.க. அணிகள் தீவிரம்

எந்த கூட்டணியில் எந்த கட்சிகள் என்பது தற்போது ஓரளவு உறுதியாகி விட்டது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தை கள், முஸ்லிம் லீக், புர ட்சி பாரதம் ஆகிய கட்சி கள் உள்ளன. இன்னும் சில அமைப் புகளும் சேரும் என்று கூறப்படு கிறது. அ.தி.மு.க. கூட் டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனி ஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் உள்ளன.
இன்னும் சில அமைப்புகளும் இதில் சேரலாம் என்று சொல் லப்படுகிறது.   தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடந்த சட்டசபை தேர்தலை போல 31 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியுடன் நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. விடுதலை சிறுத்தைகளுடன் இன்று பேச்சு வார்த்தை நடக்கிறது. மற்ற கட்சிகளுடனும் சில தினங்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து விடும். எனவே, தி.மு.க. கூட் டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு அடுத்த வாரத்துக்குள் முடி வடைந்து விடும் என்று அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகி ன்றன.

அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதி களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், குடியரசு கட்சி, பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 24-ந் தேதிக்கு முன்பு அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்து விடும் என்று அந்த கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர்.
இரண்டு கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரம் இந்த மாத இறுதிக்குள் முடிவாகி விடும் என்று கூறப் படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. தமிழ்நாடு முழு வதும் சுவர்களில் தேர்தல் விளம்பரங்களுக்கு, கட்சி தொண் டர்கள் இப்போது இடம் பிடித்து விட்டனர். ஏற்னவே இந்த கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் வேட்பாளரின் பெயர் தவிர மற்ற வாசகங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

தொகுதிகளில் வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது, புதிய வாக் காளர்களை சேர்ப்பது மற்றும் கட்சி சார்பில் செயல்படுத்தப்பட வேண்டிய தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டனர். கூட்டணி கட்சிகளும் பெரிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக் கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தேர்தல் சூடுபிடிக்கும்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: