Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பங்கு வர்த்தகம்: 227 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது

வார வர்த்தகத்தி்ன் முதல் நாளான இன்று ஏற்ற, இறக்கத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், காலை நேர வர்த்தகத்தில் பெரும் சரிவை சந்தித்த வண்ணம் இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட பங்குவர்த்தகம், வர்த்த‌கநேர இறுதி்யில் 227 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவுற்றது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 226.79 புள்ளி்கள் உயர்ந்து 18438.31 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 59.65 புள்ளிகள் உயர்‌ந்து 5518.60 என்ற அளவிலும் வர்த்தகம் முடிவடைந்தது. நிப்டி 5420 புள்ளிகளிலிருந்து 5500 ஆக உயர்ந்து பங்கு முதலீ் ட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு துறை, ஆயில் மற்றும் ‌காஸ் நிறுவனங்கள், க்ஸ்யூமர் டியூரபிள்ஸ் மற்றும் மெட்டல் நிறுவன பங்குகளின் மதிப்பு ஏறுமுகத்தில் இருந்தது. வாகன நிறுவங்களின் பங்கு மதிப்புகள் இறங்கு முகத்தில் இருந்தது. இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: